ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. தி.மு.க. வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை!

Loading

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டது.

Erode East by-election DMK candidate continues to lead!

காலை 10மணி நிலவரப்படி திராவிட முன்னேற்றக் கழகம் (வி.சி.சந்திர குமார்) – 25,350 வாக்குகள்,நாம் தமிழர் கட்சி (சீதா லட்சுமி) – 3,980 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: முன்னணி நிலவரம் வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

0Shares