தமிழக அரசு சார்பாக மாவட்ட அளவிலான கலாச்சார விழா கொண்டாட்டம்
![]()
மதுரை
தமிழக அரசு சார்பாக மாவட்ட அளவிலான கலாச்சார விழா கொண்டாட்டம்
150 க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டனர்
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகத்தில் தமிழக அரசு சார்பாக கலாச்சார போட்டிகள் நடைபெற்றது. மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் தமிழரசி, துணை இயக்குனர்கள் குபேந்திரன், சாகுல் ஹமீது, ஜோசப் ரத்தினராஜ், ஜெகதீஸ்வரி ஆகி யோர் தலைமையில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, பேரையூர் M. கல்லுப்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி T. கல்லுப்பட்டி உள்ளிட்ட யூனியன் கிராமங்களில் இருந்து இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பாக, நம் கலாச்சாரத்தை விளக்கும் வகையில் கோலப் போட்டி, கபடி போட்டி, கயிறு இழுத்தல் போட்டி, ஒவிய போட்டி, சிலம்பம் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற குழுவினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் வெற்றி பெற்ற குழுவினர் மாநில அளவில் கலாச்சாரப் போட்டியில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கலாச்சார போட்டியில் 150 க்கும் மேற்பட்ட மகளிர் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உற்சாகமாக விழாவினை கொண்டாடினர்.

