தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி
விழுப்புரம் மாவட்டம்.
.செஞ்சி மோட்டார் வாகன அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் முனீஸ்வரன் கோவில் அருகில் 36-வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் முருகவேல் தலைமையில் . நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக செஞ்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர். கார்த்திகபிரியா. கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் செஞ்சி காவல் போக்குவரத்து ஆய்வாளர் அப்பாண்டை ராஜ். வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிமுறைகளை வாகன ஓட்டிகளுக்கு எடுத்துக் கூறினார்.