புதுவை உப்பளம் ஸ்ரீ எல்லையம்மன் கோவில் கட்டுமான பணி

Loading

புதுவை உப்பளம் ஸ்ரீ எல்லையம்மன் கோவில் கட்டுமான பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ பார்வையிட்டார்

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட எல்லையம்மன் வீதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோவில் தேவஸ்தானம் கட்டுமான பணியை திமுக மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் நேரில் சென்று கோவில் நிர்வாகியுடம் பார்வையிட்டார்.
பின்னர் அம்மனை வணங்கி அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கு கொண்டு சாமி தரிசனம் செய்தார். அறநிலையத் துறையிடம் இருந்து கட்டுமான பணிக்காக நிதி உதவி அரசிடம் பெற்று தருவதாக சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் கோவில் நிர்வாகிகளிடம் உறுதி அளித்தார். உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத் தலைவர் ஹரிகிருஷ்ணன், கிளை செயலாளர்கள் செல்வம் ,சந்துரு ,இருதயராஜ் ,ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
0Shares