ஃபெயிராவின் முப்பெரும் விழா டாக்டர் ஹென்றி அழைப்பு.
ஃபெயிராவின் முப்பெரும் விழா டாக்டர் ஹென்றி அழைப்பு.
சென்னை: பொதுமக்களுக்கு பயனளிக்கும் ஆகச்சிறந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திவரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், பெயிராவின் பொதுக்குழு, மற்றும் 2025 ஆம் ஆண்டு காலண்டர் மற்றும் டைரி வெளியிட்டு, நிர்வாகிகளுக்கு பாராட்டு பத்திரம் வழங்குதல் என முப்பெரும் விழாவை அதிரடியாக அறிவித்திருக்கிறது பெயிரா கூட்டமைப்பு. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு பங்கேற்க உள்ள இந்த திருவண்ணாமலை மாநாடு குறித்து, முக்கிய தகவலையும் பெயிரா வெளியிட்டிருக்கிறது.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், பெயிரா கூட்டமைப்பின் முப்பெரும் விழா நிகழ்ச்சி குறித்து செய்தி வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் உள்ளதாவது:
பெயிரா கூட்டமைப்பின் பிரம்மாண்டமான மாநாடு, திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது. “முப்பெரும் விழா” நிகழ்ச்சியாக பரிணமிக்க போகும் இந்த மாநாடு, எதிர்வரும் 05.01.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி அளவில், திருவண்ணாமலை மாநகரம், தண்டராம்பட்டு சாலையில் அமைந்துள்ள “மாதவி பன்னீர்செல்வம்” மஹாலில், FAIRA அமைப்பின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் A.நரேஷ்சந்த் தலைமையில் நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் இந்தியா முழுவதிலும் இருந்து, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பில் தேசிய மற்றும் மாநில குழுக்களில் பொறுப்பாளர்களாக இருக்கிற கட்டுனர்களும், (பில்டர்ஸ்) வீட்டுமனை அபிவிருத்தியாளர்களும், (லே-அவுட் புரமோட்டர்ஸ்) ஆர்கிடெக்ட், (வடிவமைப்பாளர்களும்) இன்ஜினியர்ஸ் (கட்டுமான பொறியாளர்களும்), அதேபோன்று தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் இருந்து மாநில, மாவட்ட, தாலுக்கா குழுக்களின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும் இம் மாநாட்டிற்கு கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறைகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் பெருமக்களும், அரசு அதிகாரிகளும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் ஆகச்சிறந்த அரும்பெரும் திட்டங்களையும், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மகத்தான திட்டங்களையும் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியுள்ள மைய – மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிப்பது, பொதுக்குழு, செயற்குழு கூட்டம் மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு பத்திரங்களை வழங்குதல் என இந்த முப்பெரும் விழாவை முன்னெடுத்துள்ளது பெயிரா கூட்டமைப்பு.
கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் சம்பந்தப்பட்ட வீட்டுவசதி துறை, மாநகராட்சி – நகராட்சி – பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி, ஊரக உள்ளாட்சி, பதிவுத்துறை, வருவாய்த்துறை, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், தொழில்துறை உள்ளிட்ட துறைகளில் இன்னும் கொண்டு வர வேண்டிய சட்ட திட்டங்கள், சட்ட திருத்தங்கள், மாற்றியமைக்க வேண்டியவைகள், எளிமைப்படுத்த வேண்டியவைகள் குறித்தும், ஆக்கபூர்வமான கோரிக்கைகளை நிறைவேற்றி, மகத்தான தீர்மானங்களையும், மைய – மாநில அரசுகளுக்கு முன்வைத்தும் FAIRA கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி இம்மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார்.
இந்த முப்பெரும் விழா நிகழ்ச்சியை அரசு கவனத்தில் கொள்ளும் வகையில், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும், கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை சார்ந்த உறவுகளும் மிகத் துடிப்புடனும், கவனமுடனும் முன்னெடுத்து செயல்பட்டு வருகின்றனர்.
மிகச் சிறப்பான முறையில் மாநாடு நடத்திட வேண்டும் என ஃபெயிரா கூட்டமைப்பின் தேசிய மற்றும் மாநில பொறுப்பாளர்களின் மேற்பார்வையில், முப்பெரும் விழாவுக்கான பணியில் FAIRA மும்முரமாகி வருகிறது” என டாக்டர் ஆ.ஹென்றி தன்னுடைய செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.