முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு ஃபெயிரா இரங்கல்.
இரங்கல் செய்தி.
முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு ஃபெயிரா இரங்கல்.
முன்னாள் பாரத பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்களின் மறைவிற்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் இரங்கல் தெரிவித்து செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில் மன்மோகன் சிங் அவர்கள் பிரித்தானியாவின் இந்தியாவில் மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் ஊரில் ஒரு சீக்கிய குடும்பத்தில் 26 செப்டம்பர் 1932 அன்று குர்முக் சிங் மற்றும் அம்ரித் கவுர் ஆகியோருக்கு மகனாக பிறந்துள்ளார். இவர் மிக இளம் வயதிலேயே தனது தாயாரை இழந்துள்ளார்.
இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, இவரது குடும்பத்தினர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரித்சருக்கு குடிப்பெயர்ந்துள்ளனர். இவர் அங்குள்ள இந்துக் கல்லூரியில் பயின்றுள்ளார்.
குறிப்பாக இவர் கீழ்க்கண்ட பல்கலைக்கழகங்களில் பல்வேறு பட்டங்களை பெற்றுள்ளார். பொருளாதாரத்தில் First Class Honours பட்டமும் , கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், (1957)
பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர், இந்தியா
மூத்த விரிவுரையாளர், பொருளாதாரம் (1957-1959)
வாசிப்பாளர் (1959-1963)
பேராசிரியர் (1963-1965)
பொருளாதாரத்தில் D.Phil பட்டம், Nuffield கல்லூரி at ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், (1962)
தில்லி பொருளாதார பள்ளி, போன்ற பல்கலைக்கழகங்களில் பல்வேறு பட்ட படிப்புகளையும் மேற்படிப்புகளையும் முடித்துள்ளார்.
மேலும் தில்லி பல்கலைக்கழகம்
பேராசிரியர் (அனைத்துலக வர்த்தகம்) (1969-1971)
கௌரவப் பேராசிரியர் (1996)
பொருளாதார ஆலோசகர், வெளிநாட்டு வர்த்தக அமைச்சகம், இந்தியா (1971-1972)
இந்திய அரசின் முதன்மைப் பொருளியல் ஆய்வுரைஞர் (1972-1976)
கௌரவப் பேராசிரியர் , ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி (1976)
இயக்குநர், இந்திய ரிசர்வ் வங்கி (1976-1980)
இயக்குநர், இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி (1976-1980)
செயலர், நிதி அமைச்சகம் (பொருளாதார அலுவல் பிரிவு), இந்திய அரசு, (1977-1980)
ஆளுநர், இந்திய ரிசர்வ் வங்கி (1982-1985)
துணைத் தலைவர், இந்தியத் திட்டப்பணி ஆணையம், (1985-1987)
பொருளாதார விவகாரங்களில் இந்தியப் பிரதமரின் ஆலோசகர் போன்ற முக்கிய பொறுப்புகளிலும்,
மேலும் 1990 காலகட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் பிரதமர் சந்திரசேகர் அமைச்சரவையில் (1990-1991)
இந்திய நிதி அமைச்சர், காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் நரசிம்ம ராவ் அமைச்சரவையில் (ஜூன் 21, 1991 – மே 15, 1996)
எதிர்க்கட்சித் தலைவர், இந்திய நாடாளுமன்ற மேலவை தலைவர்,
என பல்வேறு பொறுப்புகளில் சிறப்பான முறையில் செயல்பட்டு,
இறுதியாக இந்தியாவின் 14வது பிரதமராக கடந்த 2004 ஆம் ஆண்டு டாக்டர் மன்மோகன் சிங் பொறுப்பேற்றார், சீக்கிய சமயத்தைச் சேர்ந்த இவர், இந்து சமயத்தை சாராத முதல் இந்தியப் பிரதமர் ஆவார். அதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான இவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது.
மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் இவர் தான். 1999 தெற்கு டெல்லியில் போட்டியிட்ட இவர் பாஜக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். 1995 முதல் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 மற்றும் 2007ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் 1982 முதலே இந்திய ரிசர்வ் வங்கி மேலாளராக பொறுப்பில் இருந்த போதே அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவியும், இந்திய பிரதமருமான இந்திரா காந்தி காலகட்டத்திலே காங்கிரஸ் கட்சியில் திட்ட ஆலோசகராகவும், காங்கிரஸ் கட்சியின் முன்னேற்றத்திற்கு சிறந்த வழிகாட்டியாகவும் செயல்பட்டதை தொடர்ந்து மன்மோகன் சிங் பிரதமர் இந்திரா காந்தியின் அபிமானம் பெற்ற நம்பிக்கையான நபராக உருவானார்.
பிரதமர் இந்திரா காந்தியின் மரணத்திற்கு பிறகு அவரது மகன் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் கட்சியின் நம்பிக்கை பெற்ற சகாக்களில் ஒருவரானார்.
மேலும் காங்கிரஸ் கட்சியில் (1982–1991) வரை காலகட்டத்தில் ராஜ்ய சபா உறுப்பினராகவே தொடர்ந்தார்.
மேலும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சந்திரசேகர், நரசிம்மராவ் போன்ற பிரதமர் மந்திரிகளின் அமைச்சரவையில் பல ஆலோசனை வழங்கும் திட்டக்குழு தலைவராகவும் செயல்பட்டார்.
மேலும் 1991ல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி மரணத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில் இந்திய பொருளாதாரம் பெரும் பின்னடைவில் இருந்தபோது இந்தியாவில் அதுவரை இல்லாத விலையேற்றம் போன்ற சிக்கல்களில் இருந்து மீட்டெடுத்ததே அன்றைய இந்திய நிதித்துறை அமைச்சரவையில் இருந்த திரு.மன்மோகன் சிங்தான் என்பதை யாராலும் மறக்க முடியாது.
மேலும் அப்போது பிரதமர் நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக யாரை நியமிக்கலாம் என்று அன்றைய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்களிடம் கலந்தாலோசனை கேட்ட போது கூட்டணி கட்சிகளில் ஒன்றான தமிழகத்தை சேர்ந்த அன்றைய அதிமுக கட்சியின் தலைவியும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் மன்மோகன் சிங்கின் பெயரை தான் பரிந்துரை செய்துள்ளார்.
மேலும் மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இல்லாத போதிலும் சிறந்த எதிர்கட்சி தலைவராகவே செயல்பட்டு உள்ளார்.
பின்பு காங்கிரஸ் கட்சியின் (1991-1996) ஆட்சி காலத்தில் பிரதமர் நரசிம்ம ராவுக்கு மிகவும் பக்கபலமாக இருந்து இந்திய பொருளாதார சிக்கலை மேம்படுத்தியதில் மன்மோகன் சிங்க்குக்கு பெரும் பங்கு உண்டு. இதனாலே அக்காலகட்டத்தில் நரசிம்ம ராவின் நம்பிக்கை பெற்றவரில் ஒருவராக திகழ்ந்தார்.
பிறகு 2004, 2009 ஆகிய இரண்டு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, பாரத பிரதமராக திகழ்ந்த மன்மோகன் சிங் அவர்கள் இந்திய தேசத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்.
டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் இந்தியா பற்றிய யோசனையினால் உயர் வளர்ச்சி மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் அனைத்து துறைகளையும் உயர்த்தும் நோக்கில் அவர் ஆற்றிய பணிகள் சிறப்பு வாய்ந்தது. குடிமக்களுக்கு உணவுக்கான சட்டப்பூர்வ உரிமை, கல்வி உரிமை, வேலை செய்யும் உரிமை மற்றும் தகவல் அறியும் உரிமை ஆகியவற்றை உறுதி செய்யும் சட்ட மசோதாக்களில் இந்த நம்பிக்கை பொறிக்கப்பட்டுள்ளது. டாக்டர் மன்மோகன் சிங்கின் உரிமைகள் சார்ந்த புரட்சி இந்திய அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது என்றால் அது மிகையாகாது.
டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் தொலைநோக்கு பார்வைக்காக மட்டுமல்லாமல், இந்தியாவை ஒரு பொருளாதார சக்தியாக ஆக்குவதற்கு வழிவகுத்தார், ஆனால் அவரது கடின உழைப்பு மற்றும் அவரது பணிவு, மென்மையான நடத்தை ஆகியவற்றிற்காகவும் மக்களிடத்தில் நன்மதிப்பை பெற்றிருந்தார். அவர் இந்தியாவை முன்னோக்கி அழைத்துச் சென்ற பாய்ச்சல்களுக்காக மட்டுமல்ல, சிந்தனை மற்றும் நேர்மையான மனிதராகவும் நினைவுகூரப்படக்கூடிய ஆகச்சிறந்த பிரதமர் அவர்.
இத்தனை சிறப்புக்குரிய நம்முடைய இந்திய தேசத்தின் முன்னாள் பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்களின் மறைவு அவர் சார்ந்த காங்கிரஸ் பேரியக்கத்திற்கும், குடும்பத்தினருக்கும் இந்திய மக்களுக்கும் பேரிழப்பாகும். ஆகவே அவரை இழந்து வாடும் அனைவருக்கும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா இறைவனடி சேர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாக டாக்டர் ஹென்றி தனது இரங்கல் செய்தி குறிப்பில் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.