தமிழக செய்தித் துறையில் புரோக்கர்கள் நடமாட்டம்

Loading

தமிழக செய்தித் துறையில் புரோக்கர்கள் நடமாட்டம்
தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறையில் பணியாற்றும் பிஆர்ஓ  ,ஏ பி ஆர் ஒ , டி டி இவர்கள் மூலமாக புரோக்கர்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இதை கட்டுப்படுத்துமா தமிழக அரசு . இவர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் அரசால் வழங்கக்கூடிய அக்கரடேஷன் ஐடி கார்டு கொடுப்பதற்கு பணம் பெறுகிறார்கள் என்று பேசப்பட்டு வருகிறது
யாராவது அதை கண்டுபிடித்து கேட்டால் உங்களுக்கு வேண்டுமானால் கார்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள் பத்திரிகையாளர்களின் உரிமையை பறிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது ஒன்று. ஒரு சில சங்கங்களின் தலைவர்களை கையில் போட்டுக்கொண்டு அவர்கள் சொல்கின்ற நபர்களுக்கு ஐந்தாயிரம் பத்தாயிரம் என வாங்குவதற்கு மாவட்ட வாரியாக கிளப்பி விட்டிருக்கின்றனர் அவர்கள் மூலமாக பணத்தைப் பெற்றுக் கொண்டு இந்த பணத்தை அதிகாரியின் ஓட்டுனர் இடம் கொடுத்து அந்த நபருக்கு ஐடி கார்டு வாங்கி தருகிறார்கள் என்பது தற்பொழுது வேகமாக பத்திரிகையாளர் மத்தியில் பரவி வருகிறதுஏ பி ஆர் ஓ வை கையில் வைத்துக் கொண்டுஇது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் பத்திரிகையை நடத்தாமல் டம்மி போட்டு கொடுத்தால் போதும் என்று சொல்கிறார்களாம்
அது போன்று தற்போது மாத பத்திரிகைநடத்தும் பத்திரிகையாளர்கள் மாதம் ஒருமுறை நான்கு பக்க பேப்பரில் தான் அச்சு அடித்து தருகிறார்கள் இப்படி கொடுத்தால் கூட போதும் ஆனால் ஒரு கார்டுக்கு எவ்வளவு என்று நிர்ணயித்து வைத்துள்ளார்களாம் அது போன்று அவர்கள் சொல்லுகின்ற பிரிண்டர் இடத்தில் கடிதம் வாங்கி கொடுத்தால் போதும் என்று சொல்லுகின்ற அளவுக்கு அரசு அதிகாரிகள் இருக்கின்றன அந்த பிரிண்டரிடம் போய் அக்கோபினா வாட்டர் மட்டுமே இவர்கள் குடிப்பார்களாம் அந்த பிரிண்டர் இடத்தில் போனால் அவர்களுக்கு சேர் போட்டு மரியாதை கொடுப்பதாக தெரிவிக்கின்றனர் வேறு பிரிண்டர் இடத்தில் யாராவது அச்சடித்தால் அது எல்லாம் செல்லாது என்று சொல்லுகிற அளவுக்கு அதிகாரிகள் மாறி இருப்பது வேதனைக்குரியது அவர்கள் சொல்லுகின்ற பிரிண்டிங் மிஷின் ஒரு நாளைக்கு பத்தாயிரம் காப்பி கூட அடிக்க முடியாது ஆனால் 20 பேருக்கு மேல் அவர் கடிதம் கொடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது அவர்களுக்கு மட்டும் எப்படி ஐடி கார்டு புதுப்பித்து தருகிறார்கள்
புதியதாக போய் கேட்டால் அதை எல்லாம் உங்களுக்கு தர முடியாது நீங்கள் பத்தாயிரம் காப்பி அடித்தால் மட்டுமே தர முடியும் என்கிறார் அவர்களெல்லாம் ஆயிரம் காப்பி 500 காப்பி என அடித்தால் மட்டும் போதுமா என்ற கேள்வி எழுந்துள்ளது இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய செய்தி துறையில் பணியாற்றும் பிஆர்ஓ எங்களுக்கும் தெரியும் நூறு காபி 200 காபி தான் அடிக்கிறார்கள் என்ன செய்வது என்று கூறும் அளவுக்கு அவர்கள் பணி செய்து கொண்டிருக்கிறார்கள் அப்படி என்றால் இவர்கள் எவருக்குமே ஐடி கார்டு கொடுக்க முடியாது என்பதுதான் உண்மை எதை கேட்டாலும் வாயால் பதில் சொல்கிறார்கலே தவிர எழுத்து மூலமாக கொடுப்பது இல்லை ஒரு GO மூலியமாகவும் தெரிவிப்பதில்லை ஒரு விண்ணப்பம் கொடுத்தால் அதற்கு பதில் அளிக்க வேண்டும் இந்த பதிலை அவர்கள் வாயால் மட்டுமே சொல்லுகிறார்கள்
தற்போது ஆளுகின்ற அரசு இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பது அரசுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்பது இன்னும் உணரவில்லை என்பதையே காட்டுகிறது தற்பொழுது ஒரு பத்திரிகை நடத்த வேண்டும் என்றால் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு நடத்துகிறார் என்பதை உணர்வதில்லை. அவர்களுடைய உரிமையை கேட்டால் அதற்கு பல காரணங்கள் சொல்லி தட்டிக் கழிக்கின்றனர் இந்த அரசு பல ஆயிரம் கோடிக்கு இலவசத்தை அறிவிக்கும் போது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதமாக விளங்கும் பத்திரிகை துறையில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு ஏன் இவ்வளவு பாகுபாடு காட்டுகின்றனர் சிறு பத்திரிகையாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ள விளம்பரங்கள் தரப்படுவதில்லை என பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன இதற்கு ஒரு கமிட்டியை போட்டுள்ளனர் அந்த கமிட்டியில் உள்ளவர்கள் பி ஆர் ஓ  ,ஏ பி ஆர் ஓ  என்ன சொல்கிறார்களோ அதிலே கையெழுத்து போடுவதற்கு தான் அந்த கமிட்டி இருக்கிறது அவர்கள் தனிச்சையாக போய் ஆய்வு செய்ய வேண்டும் ஆனால் இவர்களை அவர்கள் வண்டியிலே ஏறிக்கொண்டு ஆய்வு என்ற பெயரில் இவர்கள் அனைத்தும் பணத்தை வாங்கிக் கொண்டு கையெழுத்து போட்டு கேவலப்படுத்துகிறார்கள்
ஆகவே இந்த விஷயத்தில் முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு அந்த துறையில் உள்ள அதிகாரிகளை கூண்டோடு மாற்றினால் தான் அந்த துறை மேம்படும் செம்மைப்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை செய்தித்துறை அமைச்சர் ஒரு கணக்கை தெரிவித்துள்ளார் மூவாயிரத்து முந்நூறு நலவாரிய கார்டு தமிழ்நாடு முழுவதும் கொடுத்துள்ளதாக அது போன்று 2431 செய்தியாளர் அடையாள அட்டை கொடுத்துள்ளதாகவும் 446 செய்தியாளர்களுக்கு சுகாதார அட்டை அப்படி என்றால் நல வாரியத்தில் இணைத்துள்ள அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கி இருக்க வேண்டும் அது போன்று சுகாதார அட்டையும் வழங்கி இருக்க வேண்டும் ஆனால் 446 பேருக்கு மட்டுமே வழங்கியிருக்கிறார்கள் அப்ப மீதி இருக்கிற நபர்கள் அனைவரும் பணம் படைத்தவர்களாக இருக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளதுஇதிலிருந்து தெரிகிறது செய்தியாளர்கள் பயனடைந்து விட்டால் அவர்கள் நம்மை மதிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை ஆகவே அடையாள அட்டை வழங்குவதில் பாரபட்சம் காட்டாமல் தகுதியான அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என அனைத்து பத்திரிகையாளர்களும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர் உடனடியாக தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு அந்த துறைக்கு உத்தரவிட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களின் வேண்டுகோளாக உள்ளது .
0Shares