தமிழ்நாடு முழுவதும் ஆறுகள் ஆக்கிரமிப்பு கண்டு கொள்ளாத மாவட்ட ஆட்சியர்

Loading

தமிழ்நாடு முழுவதும் ஆறுகள் ஆக்கிரமிப்பு கண்டு கொள்ளாத மாவட்ட ஆட்சியர்
கடலூர் விழுப்புரம் சேலம் தர்மபுரிதிருவண்ணாமலைஆகிய மாவட்டங்களில் ஃபென்சல் புயல் காரணமாக
கனத்த மழை கொட்டி தீர்த்தது இந்த மழையால் ஏரி குளம் குட்டை என அனைத்தும் நிரம்பி வழிந்தன இது மட்டுமல்லாமல் சாத்தனூர் அணையில் இருந்து 1.68  லட்சம் கன அடி தண்ணீர் இரவில் திறந்து விட்டதால் பல கிராமங்கள் நீரில் மூழ்கின பல கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது பொதுமக்கள் உணவு உடை இடம் இல்லாமல் ஒரே இரவில் அனைத்தையும் இழந்தனர் இதற்கு காரணம் அந்தந்த மாவட்டத்தில் தண்ணீர் ஓடும் பாதையை ஆக்கிரமித்து பயிர் வைப்பதும் வீடு கட்டுவதும் அந்த மக்கள் பயன்படுத்தியதனால் வந்த விளைவுகள்
.ஆகவே அந்த அந்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆக்கிரமிப்பை கண்டுபிடித்து உடனடியாக அதை சரி செய்து இருந்தால் இவ்வளவு பேரிழப்பு இருந்திருக்காது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அந்த மாவட்டத்தை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் இருக்கின்றனர் அவர்களை தன்னிச்சையாக செயல்படுத்த விடாத அரசியல்வாதிகள் இருப்பதினால் அவர்களும் கையை கட்டிக் கொண்டு இவர்கள் பின்னால் செல்கின்றனர் ஒரு மாவட்ட நிர்வாகம் என்பது அந்த மாவட்ட ஆட்சியருக்கு அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து செயல்பாடுகளிலும் ஈடுபாடு இருக்க வேண்டும் ஏதோ முதலமைச்சர் வருகிறார் , எம்எல்ஏ வருகிறார் , அமைச்சர் வருகிறார் என்று அவர்கள் பின்னாடி போனால் பொதுமக்களின் தேவைகளை யார் பூர்த்தி செய்வது 60, 70 ஆண்டுகளுக்கு முன்னால் ஆறுகள் அகலமாக காணப்பட்டன அதனால் மழை காலங்களில்  வெள்ளம் வந்தால் அது போகின்ற வழித்தடத்தில் செல்லும் ஆனால் தற்பொழுது அது போவதற்கு வழி இல்லாமல் ஊருக்குள் புகுந்து விடுகின்றனஇதனால் தற்பொழுதுபெய்த மழையால் பல கிராமங்கள் நீரில் மூழ்கின மக்கள் தண்ணீர் உணவு உடை இன்றி தவித்து வருகின்றனர் மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடாக மக்களை அப்புறப்படுத்தி இருக்க வேண்டும் முகாம்களில் தங்க வைத்து உணவு அளித்திருக்க வேண்டும் ஆனால் மக்கள் தண்ணீரில் தவிக்கும்போது பல செய்தி நிறுவனங்கள் செய்திகளை சேகரித்து மக்களுக்கும் அரசுக்கும் தெரிவித்த போதுதான் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிய வருகிறது அப்படி என்றால் மாவட்ட நிர்வாகம் மக்கள் மீது அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையே மக்கள் கேள்வியாக கேட்கின்றனர்
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆறு இருக்கின்றது அந்த ஆற்றை கூறு போட்டு அரசியல்வாதிகள்
துணையுடன் மடக்கி பயிர் செய்து மேடாகி வைத்திருக்கிறார்கள்  தண்ணீர் போகும் வழியை மடக்கி வீடு மற்றும் பயிர் வைத்தால் விளைவு இப்படித்தான் இருக்கும் என்பதை மக்களுக்கு உணர்த்தி இருக்கிறது இந்த மழை. ஆனால் அரசு அதிகாரிகள் இதையெல்லாம் கவனத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக எங்கெல்லாம் ஆற்றை மடக்கி வைத்திருக்கிறார்களோ அதை கண்டுபிடித்து உடனடியாக ஜேசிபி இயந்திரத்தின் மூலம் எந்த அளவுக்கு ஆறுமுன்பு இருந்ததோ அந்த அளவை அளவீடு செய்து அதை முழுமையாக ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீர் தடையில்லாமல் செல்வதற்கு வழி செய்தால் ஊருக்குள் தண்ணீர் வருவதை தடுக்க முடியும் என்று கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகவே அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் நீர்நிலையை பாதுகாக்க அரசு உத்தரவிட வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது
0Shares