பாஜக அலுவலகத்திற்கு மர்ம பொருளுடன் பர்தா அணிந்து வந்த இஸ்லாமிய பெண்ணால் பரபரப்பு

Loading

பாஜக அலுவலகத்திற்கு மர்ம பொருளுடன் பர்தா அணிந்து வந்த இஸ்லாமிய பெண்ணால் பரபரப்பு

பாஜக மதுரை மாநகர் அலுவலகத்திற்கு கடந்த 10 09 2024 அன்று இரவு சுமார் 09:30 மணி அளவில் பாஜக அலுவலகத்தை நோட்டமிட்டு ஆட்டோவில் இருந்து இறங்கி வந்த முழுவதுமாக பர்தா அணிந்திருந்த சுமார் 40 வயது தக்க பெண் கண்களிலும் கருப்பு நிற கண்ணாடி அணிந்து உள்ளே நுழைவாயிலில் கையில் ஒரு மர்ம பொருளோடு நின்று கொண்டிருந்தார். சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் சந்தேகம் அடைந்து பக்கத்தில் சென்று விசாரித்தபோது இங்கு பொருளாதாரப் பிரிவு மாநில தலைவர் எம். எஸ். ஷா அவர் மீது ஒரு புகார் கொடுக்க வந்திருக்கிறேன் என்று கூறி இரண்டு நிமிடத்தில் கையில் வைத்திருந்த கடிதத்தை கொடுத்து விட்டு மறைத்து வைத்திருந்த மர்ம பொருளுடன் உடனடியாக அங்கிருந்து சென்று விட்டார். இச்சம்பவம் குறித்து மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவரது ஆலோசனையின் பேரில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் அய்யப்ப ராஜா, மாவட்ட பொதுச் செயலாளர் கருட கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் பொருளாதாரப் பிரிவு மாநில தலைவர் எம். எஸ். ஷா அவர்கள் காவல் ஆணையாளர் அவர்களிடம், நான் பாஜகவின் மாநில பொருளாதார பிரிவு தலைவராக மூன்று வருடங்களாக சேவை செய்து வருகிறேன். நான் ராமர் கோயில் கும்பாபிஷேக  அழைப்புகளை எனது கல்லூரி பள்ளிவாசலில் கொடுத்ததினால் இஸ்லாமிய கட்சிகளை சேர்ந்த பெரும்பாலானோர் எனக்கு எதிராக என்னை இந்த கட்சியில் இருந்து வெளியே வர சொல்லி எனக்கு தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்த அனைவரும் என் மீது விரோதம் கொண்டு என் மீது எனக்கு எதிராக தீர்மானம் ஏற்றினார்கள். அதன் தொடர்ச்சியாக எனது மகளின் திருமணத்தை நிறுத்துவதாக கூறி மிரட்டினார்கள். இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்த அனைவரும் எனக்கு எதிராக இருந்து கொண்டு இருந்ததால் நான் இஸ்லாமியராக பிறந்து பாஜகவில் மாநில பொறுப்பில் இருப்பதை பொறுத்துக் கொள்ள இயலாத இஸ்லாமிய இயக்கங்கள் என்னை கொலை செய்யும் நோக்கத்தோடு நடந்து கொண்டிருக்கும் வேளையில், தற்போது இவ்வாறான செயல் நிகழ்ந்துள்ளது. எனவே எனது உயிருக்கும், எனது உடமைக்கும், எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே பாஜக மாவட்ட அலுவலகத்திற்கு தனது அங்க அடையாளங்களை மறைத்துக் கொண்டு மர்ம பொருள் உடன் வந்த பெண்ணையும், அவரை அழைத்துக் கொண்டு வந்த ஆட்டோ டிரைவரையும் கண்டுபிடித்து இந்த சதி செயலின் பின்னால் இருக்கும் உண்மை தன்மையை அறிந்து தக்க நடவடிக்கை எடுத்து எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தார். இச்சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை செய்து  நடவடிக்கை எடுப்பதாகவும், தாங்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் காவல்துறை ஆணையாளர் தெரிவித்தார். இச்சம்பவம்  பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
0Shares