ஆடிப்பெருக்கு தினத்தை வேலை நாளாக அறிவிக்கவும்முன்பதிவு டோக்கன்கள் எண்ணிக்கையை உயர்த்த கோரியும்பதிவுத்துறை அமைச்சர் அவர்களுக்குஆ.ஹென்றி  கடிதம்

Loading

ஆடிப்பெருக்கு தினத்தை வேலை நாளாக அறிவிக்க கோரியும், முன்பதிவு டோக்கன்கள் எண்ணிக்கையை உயர்த்த கோரியும் மாண்புமிகு தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி  கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

தமிழகத்தில் எதிர்வரும் 2024, ஆகஸ்ட் 03 சனிக்கிழமை) ஆடிப் பெருக்கு, தினத்தன்று எந்த ஒரு சுப காரியத்தையோ, தொழிலையோ, வழிபாட்டினையோ துவங்கினால் அதன் பலன் பல மடங்காக பெருகிக் கொண்டே இருக்கும் என்பது தமிழகத்தில் வசிக்கும் பெருமக்களின் நம்பிக்கை. இது பெருக்கத்திற்குரிய நாள் என்பதால் சுப காரியங்கள் பலவும் இந்த நாளில் துவங்கப்படுகிறது.

ஆகவே தமிழக மக்களின் பெரும் நம்பிக்கை தினமான பெருக்கத்திற்குரிய ஆடிப்பெருக்கினை முன்னிட்டு, ஆடி 18 சுபதினத்தில் சொத்துக்களை பதிவு செய்ய விரும்பும் பொது மக்களுக்கு உதவிடும் வகையில், ஏதுவாக தமிழ்நாடு முழுவதும் உள்ள பதிவு அலுவலகங்களுக்கு அன்று வேலை நாளாக அறிவித்தும், மேலும் இந்த சுப தினத்தில் பதிவு பணியை மேற்கொள்ள வருகை தரும்

பொதுமக்களுக்கு எந்த விதமான வீண் சிரமமுமின்றி தேவையான அளவிற்கு முன்பதிவு டோக்கன்கள் கிடைத்திடும் வகையில், முன்பதிவு டோக்கன்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தி, பொதுமக்களுக்கு உதவிட வேண்டுமென பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *