மெட் டெக் மித்ர: இந்தியாவில் தயாரிக்கப்படும் மருத்துவத் தொழில்நுட்ப தயாரிப்புகளின் வளர்ச்சி, மதிப்பீடு மற்றும் அங்கீகாரத்திற்கான ஓர் எளிய வழிமுறை

Loading

மெட் டெக் மித்ர: இந்தியாவில் தயாரிக்கப்படும்
மருத்துவத் தொழில்நுட்ப தயாரிப்புகளின் வளர்ச்சி,
மதிப்பீடு மற்றும் அங்கீகாரத்திற்கான ஓர் எளியவழிமுறை

வினோத் கே பால்,
உறுப்பினர், நித்தி ஆயோக்
மருத்துவ மதிப்பீடு, ஒழுங்குமுறை வசதி மற்றும் புதிய மருத்துவ
தொழில்நுட்பத் தயாரிப்புகளை மேற்கொள்ளும்
கண்டுபிடிப்பாளர்களுக்குக் கைகொடுக்கும் மருத்துவத் தொழில்நுட்ப
நண்பன் (மெட்டெக் மித்ர) என்ற முன்முயற்சியை மத்திய அரசு
அண்மையில் தொடங்கியுள்ளது.
ஒரு புதிய மருத்துவத் தொழில்நுட்பத் தயாரிப்பின் பயணம் (எ.கா.
மருத்துவ சாதனம் அல்லது நோயறிதல்) ஓர் ஆய்வகத்தில் அதன்
ஆதாரக் கருத்தை நிரூபிக்கும் ஒரு கண்டுபிடிப்பாளரின்
யோசனையாகத் தொடங்குகிறது. சோதனைக்கான
மூலசாதனங்களைத் தயாரிக்கக் கண்டுபிடிப்பாளருக்கு மேலும் ஒரு
பங்குதாரர் தேவை. தயாரிப்புக்கு விலங்கு ஆய்வுகள்
தேவைப்படலாம். இறுதியில், மனித ஆய்வுகள் கடுமையான
ஒழுங்குமுறை மற்றும் நெறிமுறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றி
மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் வலுவான ஆராய்ச்சி
முறைகளைப் பயன்படுத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மற்றும்
உரிமம் பெற்ற தயாரிப்பு பின்னர் பெரிய அளவிலான உற்பத்தி
மற்றும் சந்தை நுழைவுக்கான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறது.
புத்தாக்கத் தொழில் முனைவோர் மற்றும் தொடக்க நிறுவனங்கள்
தொழில்நுட்பத்தில் மிகவும் சிறந்தவர்களாக இருக்கலாம். ஆனால்
மருத்துவ அமைப்பில் அவர்கள் சிக்கலான பயணத்தை
வழிநடத்துவது கடினமாகும். பெரும்பாலும் அவர்களுக்கு சரியான
நேரத்தில், விரிவான வழிகாட்டுதலும் வசதியும் கிடைப்பதில்லை.
இதன் விளைவாக, ஏராளமான பயனுள்ள மருத்துவ தொழில்நுட்பத்
தயாரிப்புகள் வெவ்வேறு கட்டங்களில் சிக்கி நிற்கிறன. இதனால்,
இளம் தொழில் முனைவோருக்கு விரக்தி ஏற்படும் சூழல்
உருவாகிறது.
விஞ்ஞானிகள், புதுமைப் படைப்பாளர்கள், ஸ்டார்ட் அப்
நிறுவனங்கள் எதிர்கொள்ளும் மேற்கண்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு

காணும் வகையிலும், புத்தாக்கத் தொழில்முனைவோருக்கு உதவும்
வகையிலும், மத்திய அரசு தற்போது ஒரு வசதியை
உருவாக்கியுள்ளது. 2023 டிசம்பர் 25, நல்லாட்சி தினத்தன்று, இந்திய
மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், நித்தி ஆயோக், சுகாதார மற்றும்
குடும்ப நல அமைச்சகத்தின் மத்திய மருந்து தரநிலைகள் மற்றும்
கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து மருத்துவத்
தொழில்நுட்ப நண்பன் (மெட் டெக் மித்ர) என்னும் முன்முயற்சியை
அறிமுகப்படுத்தியது.
இதற்காக, ஐசிஎம்ஆர் இணையதளத்தில் https://medtechmitra.icmr.org.in/
என்னும் ஒரு போர்டல் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது ஐசிஎம்ஆரில்
உள்ள மருத்துவ சாதனம் மற்றும் நோயறிதல் இயக்க
செயலகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது. இது புத்தாக்கத் தொழில்
முனைவோருக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
பெரிய சவாலாக உள்ள மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ள
ஒத்துழைப்பு குழுக்களும், நிதியும் தேவையாகும். இந்த மெட் டெக்
மித்ர குழு ஐ.சி.எம்.ஆரின் பிற ஆராய்ச்சி நிறுவனங்களின்
ஆராய்ச்சியாளர்களுடன் கண்டுபிடிப்பாளர்களை இணைக்கும்.
அறிவியல் மறுஆய்வு செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட
புதிய மருத்துவ ஆய்வுகளை நடத்தும் நிறுவனங்களுக்கு நிதி
வழங்கப்படும்.
மெட் டெக் மித்ர அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய
காலத்திற்குள்ளாகவே, 80-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்பாளர்கள் மெட்
டெக் மித்ரவுடன் இணைந்துள்ளனர். எதிர்காலத்தில் இந்த
அமைப்பின் சாத்தியக்கூறுகள் அளப்பரியவையாக இருக்கும்.
மெட் டெக் தொழில் தற்போது 11 பில்லியன் அமெரிக்க டாலர்
மதிப்புள்ள புதியகண்டுபிடிப்புடன் வளர்ந்துவரும் புதிய துறையாக
உள்ளது. இது 2030-ம் ஆண்டில் 50 பில்லியன் அமெரிக்க டாலரை
எட்டும் ஆற்றலுடன் உள்ளது. இந்தியாவின் புத்தாக்கத் தொழில்
சூழல் பிரகாசமான நிலையில் உள்ளது. நாட்டில் தற்போது உள்ள 1
லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்களில், குறிப்பிடத்தக்க விகித
நிறுவனங்கள் மருத்துவத் தொழில்நுட்பங்களில் கவனம்
செலுத்துகின்றன.
நோயறிதல் உள்ளிட்ட மருத்துவ சாதனங்களுக்கு இந்தியாவில்
பெரும் தேவை உள்ளது. ஆனால் அவற்றில் 80% இறக்குமதி
செய்கிறோம். உள்நாட்டு மெட் டெக் தயாரிப்புகள் பெரும்பாலும்
குறைந்த செலவிலான தொழில்நுட்பம் கொண்டவை. உலகெங்கிலும்

உயர்தர மற்றும் புதுமையான மருத்துவத் தொழில்நுட்பத்
தயாரிப்புகளை வழங்கும் நிறுவனமாக நமது தொழில்துறை தன்னை
மாற்றிக் கொள்ள இந்த அமைப்பு உதவும்.
மெட்டெக் துறையை மேம்படுத்த அரசு அண்மையில் பல
நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மருத்துவ சாதனப் பூங்காக்கள்
உருவாக்கப்பட்டு வருகின்றன. தேசிய மருத்துவ சாதனக் கொள்கை
தொடங்கப்பட்டுள்ளது.
'ஜெய் விஞ்ஞான், ஜெய் அனுஷதன்' மற்றும் இந்தியாவில்
தயாரிப்போம் என்ற பிரதமரின் அறைகூவலை உள்ளடக்கிய
மருத்துவத் தொழில்நுட்பத் துறைக்கான புதிய கண்டுபிடிப்புகள்
மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சூழலை
ஊக்குவிப்பதற்கான மேற்கண்ட முயற்சிகளின் தொடர்ச்சியாக மெட்
டெக் மித்ர முன்முயற்சி பார்க்கப்பட வேண்டும். வளர்ச்சியடைந்த
பாரதத் திட்டத்துக்கு முன்னதாக மெட்டெக் தயாரிப்புகள்
முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
குறைந்த செலவில், உள்நாட்டு, உயர்தர மருத்துவ சாதனங்கள்
மற்றும் நோய் கண்டறிதல் மூலம் உலகளாவிய சுகாதாரப்
பாதுகாப்பை அடைவதற்கான இந்தியாவின் முயற்சிகளை இந்த
அமைப்பு வலுப்படுத்தும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *