சென்னை அரசு மருத்துமனையில் ராஜீவ் சிலை : காங்கிரஸ் வலியுறுத்தல்
சென்னை அரசு மருத்துமனையில் ராஜீவ் சிலை : காங்கிரஸ் வலியுறுத்தல்
சென்னை, டிச.18
சென்னை அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் உருவச்சிலையை வைக்க வேண்டுமென காங்கிசார் வலியுறுத்தியுள்ளனர்
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுசெயலாளர் கவிஞர் ராமலிங்கலிங்க ஜோதி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் நேற்று தனது 64 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். இந்த விழாவில் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட முதியோர் வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக காங்கிரஸ் செயலாளர்கள் அனுசியா எர்னஸ்ட்டோ, முன்னாள் எம்எல்ஏ அருள் அன்பரசு, மாத்தூர் ரங்கநாயகி மற்றும் கவிஞர் பாலா மீரா ஆகியோர் பங்கேற்று வாழ்த்துக்கூறினர். இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ அருள் அன்பரசு பேசியபோது , சென்னை அரசு பொதுமருத்துவனைக்கு ராஜீவ்காந்தி பெயர் சூட்ட போராடி வெற்றி கண்டவர் ராமலிங்கஜோதி என்றும்
அவர் மேன்மேலும் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்றும் வாழ்த்தினார் .
முடிவில் பேசிய ராமலிங்கஜோதி, முன்னாள் முதல்வர் கருணாநிதி இந்த மருத்துவமனைக்கு ராஜீவ்காந்தியின் பெயரை சூட்டினார். இந்நாள் முதல்வர் மு. க. ஸ்டாலின், ராஜீவ் காந்தி சிலையை இந்த மருத்துவமனை வளாகத்தில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்