மதச்சார்பற்ற இந்தியாவில் மதத்தை முதன்மைப்படுத்துவதை எதிர்க்க வேண்டும் : பாரதி மன்றத்தில் பேச்சு!
மதச்சார்பற்ற இந்தியாவில் மதத்தை முதன்மைப்படுத்துவதை எதிர்க்க வேண்டும் : பாரதி மன்றத்தில் பேச்சு!
செங்கல்பட்டு: அறிவுக்கும் அறிவியலு க்கும் எதிரான நடைமுறை பழக்க வழக்கங்களான கீழ்மை குணங்களை அகற்றிட, பலரும் பலப்பல காலக் கட்டங்களில் பல்வேறு வழிமுறை களால் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்திருக்கிறார்கள்.
மதவாதம் அரசியலில் பெரும்பங்கு வகித்து வருவது வேரறுக்கப்பட வேண்டும். மதவாத அரசியல் சமூக மாற்றத்துக்கும், சமூகம் முன்னேற்றத் திற்கும் துணை நிற்காது. ஆகவே மதச்சார்பற்ற இந்தியாவில் மதத்தை முதன்மைப்படுத்துவதை எதிர்க்க வேண்டும் என செங்கல்பட்டு பாரதி மன்றத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் மணிக்கோ பன்னீர்செல்வம் “கீழ்மை அகற்று” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
செங்கை பாரதி மன்றத்தின் 29 வது நிகழ்ச்சியாக, செவி நுகர் கருத்தரங்க நிகழ்ச்சியும், புத்தக அறிமுகமும் மற்றும் தமிழ்ப் பணிக்கு பாராட்டும், செங்கல்பட்டு கணேஷ்பவன்உணவக அரங்கில் டிச.16 மாலை நடந்தேறியது.
முனைவர் கிள்ளிவளவன் தலைமை யில் நடைபெற்ற நிகழ்வில், பாரதி மன்றத்தின் செயலாளர் பேபி வர வேற்று பேசினார். பத்திரிகையாள ரும், சமூக செயல்பாட்டாளரும், எழுத் தாளருமான நீ.சு.பெருமாள் எழுதிய “சமகாலத்தின் எதிரொலிகள்”எனும் நூல் அறிமுகப்படுத்தப்பட்டது.
கவிஞர் பாரதிராஜா மற்றும் கவிஞர் பன்னீர்செல்வம் ஆகியோரின் தமிழ்ப் பணியை பாராட்டி சிறப்பு செய்யப் பட்டது. “கீழ்மை அகற்று” எனும் தலை ப்பில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறு வனத்தின், பாரதிதாசன் ஆய்வு இரு க்கையின் பேராசிரியர் மணிக்கோ. பன்னீர்செல்வம் கருத்துரைத்து பேசினார்.
அவர் பேசியதாவது: உற்பத்தி அடிப் படையிலான சமூக வாழ்நிலைகளின் கீழ்மை போக்குகளை அகற்றிட, பொதுவுடைமையாளர்களான கம்யூ னிஸ்டுகள் காலந்தோறும் போராடி வருகிறார்கள்.
மனித மனங்களின் கீழ்மையை அகற்றிட வேண்டி ,உள்ளார்ந்த விஷயங்களான ஆன்மா, பரமாத்மா, ஜீவாத்மா ,முக்தி அடைவது குறித்து இறைவணக்கம் செய்துவர வேண் டும் என பக்திமார்க்கர்த்தினர் பரப் புரைத்து வருகின்றனர்.
மூடப்பழக்கவழக்கங்கள் எனும் கீழ் மையை அகற்றிட ,சுயத்தை, சுயஆற் றலை, சுயமரியாதையை வளர்த்துக் கொள்ளவேண்டுமென சுயமரியாதை இயக்கத்தினர் விழிப்புணர்வு ஊட்டி வருகின்றனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான் அனைவருக்குமான சுயத்தை வழங்கி வாழ்நிலையை உறுதிப்படுத்துவதாக இருக்கும். ஆகவே இந்துத்துவ, மத வாத, பாசிச கட்டமைப்புக்கு எதிராக எழுச்சி கொள்ளாமல், அரசியல் கீழ் மையை அகற்ற முடியாது என பேசினார்.
வாசிப்பு பழக்கம் தான் மனிதர்களை நேசிக்கச் செய்யும். நமது தாய் மொழி தான் நம்மையெல்லாம் இணைத்து நிற்கிறது .மொழிக்காப்பு போராட்டங் கள் எல்லாம் தமிழகத்தில் தான் நடந் திருக்கிறது.