ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நீடித்ததால் போக்குவரத்து பாதிப்பு
திருவண்ணாமலை
அராஜக செயல்களில் ஈடுபடுவதை தட்டி கேட்டதால் கணவன் மற்றும் மனைவியை தாக்கிய மாற்று சமூகத்தை சேர்ந்த ஆறு நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்….
ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நீடித்ததால் போக்குவரத்து பாதிப்பு…..
திருவண்ணாமலை 30-10-23
திருவண்ணாமலை மாவட்டம் வேளானந்தல் அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் இரு வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.
இந்நிலையில் செல்லங்குப்பம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் நேற்று மாலை ரமேஷ் மற்றும் அஸ்வந்தி என்ற கணவன் மனைவி இருவரும் நடந்து சென்றுள்ளனர். அப்போது 4 இருசக்கர வாகனத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்த எட்டு நபர்கள் அதிவேகத்தில் சென்றுள்ளனர்.
இதனைப் பார்த்த ரமேஷ் அவர்களிடம் ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்ப உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாற்று சமூகத்தினர் உடனடியாக கணவன் மற்றும் மனைவி இருவரையும் தாக்கியதுடன் ரமேஷின் தலை மற்றும் கழுத்தில் பிளேடால் கிழித்துள்ளனர். இதனை தட்டிக் கேட்ட அவரது மனைவியை சரமாரியாக தாக்கி விட்டு மாற்று சமூகத்தை சேர்ந்த ஆறு நபர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
உடனடியாக இருவரையும் மீட்ட உறவினர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இந்த சம்பவம் குறித்து வேட்டவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் தற்போது வரை வேட்டவலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பிச் சென்ற நபர்களை கைது செய்யாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திருவண்ணாமலை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வேளானந்தல் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தது.
இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தப்பி ஓடிய ஆறு நபர்களையும் கைது செய்வோம் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு களைந்து சென்றனர்.