மீண்டும் வெளியாகும் ரதி நிர்வேதம்
![]()
கடந்த 1978ல் பரதன் இயக்கத்தில் ஜெயபாரதி நடித்த படம், ‘ரதி நிர்வேதம்’. இப்படம் 2011ல் ஸ்வேதா மேனன் நடிப்பில் வெளியானது. இதை டி.கே.ராஜீவ் குமார் இயக்கினார். தன்னை விட அதிக வயது கொண்ட பெண்ணுடன் இளைஞனுக்கு ஏற்படும் காதலை மையப்படுத்தி இப்படம் உருவானது. ஸ்வேதா மேனனின் கவர்ச்சி நடிப்புக்கு மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், மீண்டும் ‘ரதி நிர்வேதம்’ படத்தை ஆந்திராவில் திரையிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 49 வயதாகும் ஸ்வேதா மேனன், ஏற்கனவே தமிழில் வெளியான ‘சிநேகிதியே…’, ‘சந்தித்தவேளை’, ‘சாது மிரண்டா’, ‘நான் அவன் இல்லை 2’, ‘அரவான்’, ‘துணை முதல்வர்’, ‘இணையதளம்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
மேலும், இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிப் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

