பதிவுத்துறை தலைவருக்கு பொதுமக்கள் நலன் கருதி பெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்.
பதிவுத்துறை தலைவருக்கு பொதுமக்கள் நலன் கருதி பெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்.
ஐப்பசி மாதம் முதல் நாள் சுப முகூர்த்த தினத்தில் பதிவு செய்ய விரும்பும் பொது மக்களின் நலன் கருதி முன்பதிவு டோக்கனை உயர்த்தி வழங்கிட வேண்டுமென அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் – தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தமிழ்நாடு தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதிய கடிதத்தில் எதிர்வரும் 18/10/2023 அன்று ஐப்பசி மாதம் முதல் நாள் சுப முகூர்த்த தினம் என்பதால் மாநிலம் முழுவதும் உள்ள பல சார் பதிவாளர் அலுவலகங்களில் (குறிப்பாக படப்பை, குன்றத்தூர், திருப்போரூர், செங்கல்பட்டு உட்பட பல அலுவலகங்களில்) ஆவணங்களை பதிவு செய்ய முன்பதிவு டோக்கன் இல்லை.
புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் முதல் நாள் சுபமுகூர்த்த தினம் என்பதால் பொதுமக்கள் பலரும் தாங்கள் வாங்குகின்ற சொத்துக்களை சுபமுகூர்த்த தினத்தில் பதிவு செய்ய விரும்புகின்றனர்.
ஆகவே பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அவர்கள் இதனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் எந்தெந்த சார்பதிவாளர் அலுவலகங்களில் மேற்கண்ட சுபமுகூர்த்த தினத்தில் முன்பதிவு டோக்கன் இல்லையோ அந்த அலுவலகத்தில் எல்லாம் கூடுதலாக தேவையான அளவிற்கு முன்பதிவு டோக்கனை கணிசமாக உயர்த்தி வழங்குவதன் மூலம் அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் பொதுமக்களின் விருப்பமும் நிறைவேறும். ஆகவே பொதுமக்கள் எந்த விதமான சிரமமுமின்றி தங்களின் விருப்பப்படி தங்கள் பெயரில் மேற்கண்ட சுப முகூர்த்த நாளில் ஆவணங்களை பதிவு செய்வதற்கு தேவையான அளவிற்கு உயர்த்தி வழங்கிட வழிவகை செய்ய வேண்டும் என பதிவுத்துறை தலைவருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.