மாநிலம் முழுவதும் பொறியாளர்களை ஒரே பதிவின் கீழ் அனுமதிக்க வேண்டி கடிதம் எழுதி உள்ளார்ஆ. ஹென்றி
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர்- தேசிய தலைவர் திரு ஆ ஹென்றி அவர்கள் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறை அமைச்சர் அவர்களுக்கு
மாநிலம் முழுவதும் பொறியாளர்களை ஒரே பதிவின் கீழ் அனுமதிக்க வேண்டி கடிதம் எழுதி உள்ளார்
தமிழகத்தில் தற்பொழுது மனை பிரிவு, மனை உட்பிரிவு, கட்டட அனுமதி, நில மறுவகைபாடு மாற்றம் உள்ளிட்ட அனுமதிகளை பெறுவதற்கு பொதுமக்கள் ஆர்க்கிடெக்ட், பதிவு பெற்ற பொறியாளர்கள், உரிமம் பெற்ற கட்டட அளவையர்கள் (LBS) உள்ளிட்டோரை அணுகி இவர்களின் அனுமதியுடன திட்ட வரைபடங்களை தயாரித்து ஒற்றை சாளர முறையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது.
தற்பொழுது இவர்களுக்கான பதிவு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு என தனியாகவும், மாநகராட்சி வாரியாக தனியாகவும், நகராட்சி வாரியாக தனியாகவும், பேரூராட்சி வாரியாக தனியாகவும் மற்றும் ஊராட்சிக்கு என தனியாகவும் பதிவு செய்ய வேண்டி உள்ளது.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டட திட்ட விதிகள் என மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான விதிகளையும், அதேபோன்று மாநிலம் முழுவதிலும் இருந்து அனுமதி கோரி விண்ணப்பிப்பதற்கு ஒற்றை சாளர முறையில் இணையதளத்தில் விண்ணப்பிககும் தொலை நோக்கு திட்டத்தையும் கொண்டு வந்து தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இந்த அடிப்படையில் மாநிலம் முழுவதும் ஏதாவது ஒரு இடத்தில் அதாவது சிஎம்டிஏ, டிடிசிபி, மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி அல்லது ஊராட்சி அலுவலகத்தில் பதிவு செய்தால் அந்த பதிவின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் திட்டம் தயாரித்து அதில் கையொப்பமிடம் அதிகாரத்தை பொறியாளர்களுக்கு வழங்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என குறிப்பிட்டு வீட்டு வசதி துறை அமைச்சருக்கு Faira தலைவர் கடிதம் எழுதி உள்ளார்