பதிவுத்துறை தலைவருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்.

Loading

பதிவுத்துறை தலைவருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், வங்கியில் கடன் பெற்று மனைகளையும் வீடுகளையும் வாங்குகின்ற பொதுமக்கள் நலன் கருதி, தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்தில் மனைகளையும் வீடுகளையும் வாங்குகின்ற பொது மக்கள் பெரும்பாலும் வங்கியில் கடன் பெற்றுதான் வாங்குகின்றனர். அப்படி மனைகளை வாங்குகின்ற பொதுமக்கள் வங்கியில் கடன் பெறும்போது மனை மற்றும் அதில் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுமான பணியை மேற்கொள்ளும் வகையில் உறுதியளித்து தான் வங்கியில் கடன் பெறுகின்றனர்.

அதேபோன்று வங்கியும் மனை மற்றும் கட்டிடத்திற்கு (Plot cum Construction) தேவையான திட்டத்தொகையை கணக்கிட்டு தான் வங்கி கடனை அனுமதிக்கிறது. (Bank Loan Sanction)
இப்படி கடன் பெற்ற பிறகு மனையை பதிவு செய்தவுடன், வங்கியில் கடன் பெற்றதற்கு ஆதாரமாக ஆவண ஒப்படைப்பை பதிவு செய்ய வேண்டும். (Memarandum of deposit of title deed) உதாரணத்திற்கு மனையை ₹.30 லட்சம் ரூபாய்க்கு பதிவு செய்துவிட்டு, வங்கி அனுமதித்திருக்கிற (மனை மற்றும் கட்டிடம்) கடன் தொகைக்கான ஆவண ஒப்படைப்பை ₹.45 லட்சம் ரூபாய்க்கு உடனடியாக பதிவு செய்ய முடியாது என சார் பதிவாளர்கள் (பதிவு சட்ட விதிகளுக்கு எதிராக) நிராகரிக்கின்றனர். காரணம் தணிக்கையில் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். இதனால் மேற்கண்ட ஆவணங்களை பதிவு செய்ய வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். வங்கியில் கடன் பெற்று மனையை பதிவு செய்துவிட்டு உரிய நேரத்தில் வங்கியில் இருந்து வரைவோலை (DD) பெற்று உரிய உரிமையாளருக்கு ஒப்படைக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஒரு சில பதிவாளர்களின் இப்படிப்பட்ட செயல்களால் பல ஆவணங்கள் பரிவர்த்தனைகள் நடைபெறாமல் போகிறது. இதனால் பதிவுத் துறைக்கு பெருமளவில் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. அதேபோல் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

ஆகவே பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை தலைவர் அவர்கள், மேற்கண்ட பிரச்சனையை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு,  மேற்கண்ட இனங்களில்  பொது மக்களின் வீண் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டும், தகுந்த தீர்வு காணும் வகையிலும், மேற்கண்ட வகையில் செயல்படும் சார் பதிவாளர்களுக்கு  சரியான  தெளிவுரையை தாங்கள் சுற்றறிக்கையாக வெளியிட்டு உதவிட வேண்டுமென பெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் பதிவுத்துறை தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *