வீட்டு வசதித்துறை முதன்மைச் செயலாளருக்கு பெயிரா தலைவர் டாக்டர்.ஹென்றி கடிதம்.

Loading

வீட்டு வசதித்துறை முதன்மைச் செயலாளருக்கு பெயிரா தலைவர்
டாக்டர்.ஹென்றி கடிதம்.
தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளருக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் – தேசிய தலைவர் டாக்டர்.ஆ.ஹென்றி அவர்கள் பொதுமக்கள் நலன் கருதி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்  அங்கீகாரம் இல்லாத பட்டா வீட்டு மனைகளை அங்கீகாரம் பெறும்வகையில் மனை வரன்முறை சட்டம் 2017, அரசாணை எண் 78 மற்றும் 172 ஐ அரசு கொண்டு வந்தது. இறுதியாக மனை வரன்முறை சட்டத்தின் கீழ், அங்கீகாரமற்ற பட்டா வீட்டு மனைகளை விண்ணப்பித்து அங்கீகாரம் பெறும் வகையில், அதற்கான வாய்ப்பினை கடந்த 28/03/2021 வரை நீடித்திருந்தது.
இந்த கால அவகாசத்திற்குள் பட்டா மனைகளை வாங்கி வைத்திருக்கும் எண்ணற்ற பொதுமக்கள், (வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று இருந்ததாலும், இதுகுறித்து போதிய தகவலும் விழிப்புணர்வும் இல்லாததாலும்) விண்ணப்பிக்க தவறவிட்டனர்.
ஆகவே இப்படி தவறவிட்ட பொதுமக்களுக்காக  மேலும் ஒரு வாய்ப்பினை வழங்கும் வகையில், மனை வரன்முறை சட்டத்தை 6 மாதம் காலம் கால நீட்டிப்பு செய்து தர வேண்டும் என மேற்கண்ட அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் கடந்த 20/12/2022 அன்று சென்னையில் நடைபெற்ற முப்பெரும் விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு வீட்டுவசதி துறை அமைச்சர் அவர்களிடத்தில் கோரிக்கை வைத்தோம். அமைச்சர் அவர்களும் அந்த மேடையிலேயே மனை வரன்முறை சட்டத்தை அதிகாரிகளுடன் கலந்து பேசி 6 மாத காலம் கால நீட்டிப்பு செய்து தருவதாக வாக்குறுதியும் உத்தரவாதமும் அளித்தார்கள்.
மேலும் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில், மாண்புமிகு வீட்டுவசதி துறை அமைச்சர் அவர்களின் தலைமையில், கடந்த 05/04/2023 அன்று நடைபெற்ற ரியல் எஸ்டேட் சங்கங்களின் கலந்தாய்வு கூட்டத்திலும் இந்த கோரிக்கை தங்கள் முன்னும் வைக்கப்பட்டது.
மேற்கண்ட மனை வரன்முறை சட்டம் கால நீட்டிப்பு சம்பந்தமாக விசாரித்ததில், அதற்கான கோப்பு தங்களின் அலுவலகத்தில் தங்களின் அனுமதிக்காக இருப்பதாக தகவல் தெரிய வருகிறது. ஆகவே பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அவர்கள், பொதுமக்களின் நலன் கருதி மனை வரன்முறை சட்டம் கால நீட்டிப்பை, மேலும் கால தாமதமின்றி அரசாணை வெளியிட்டு உதவிட வேண்டுமென பொதுமக்களின் சார்பில் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *