ஏ .ஐ. டி .யு. சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 

Loading

12 மணி நேர வேலை என்னும் சட்ட அமலாக்க முயற்சியை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும்:

ஏ .ஐ. டி .யு. சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சென்னை:  சமூக நீதி என்பது 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்னும் சமூக நலனில் அக்கறை கொண்டதான தாகும் . அப்படி இருக்க 12 மணி நேர வேலை என்பது சமூக நீதியை புறக் கணிக்கும் அநாகரிக செயல் மற்றும் மனித உரிமை மீறலாகும். இதை தொழிலாளி வர்க்கம் ஒருபோதும் அனுமதித்திடாது ; எதிர்த்து போராடி வெற்றி பெற அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொண்டிடும் . எனவே 12 மணி நேர வேலை எனும் சட்ட அமலாக்க முயற்சியை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என ஏ .ஐ. டி .யு .சி தொழிற்சங்கத் தினர் தேசிய செயலாளர் டி .எம். மூர்த்தி, மாநில செயலாளர் எம். இரா தாகிருஷ்ணன் தலைமையில் ஒன்று கூடி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எட்டு மணி நேர வேலையை பன்னிரெ ண்டு மணி நேர வேலையாக உயர்த்து கிற தமிழ்நாடு அரசின் சட்ட திருத்தத் தை ரத்து செய்ய வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் மாநிலம் தழுவிய  ஆர்ப்பாட்டத்தை மேற் கொண்டுள்ளன. ஏப். 21 அன்று வட சென்னை ,தென்சென்னை, மத்திய சென்னை மாவட்ட அமைப்புகளின் சார்பில் ,சென்னை ஆட்சியர் அலுவல கம் அருகில்ஆர்பாட்டம்நடைபெற்றது.
ஏஐடியுசி யின் தேசிய செயலாளர் டி. எம் .மூர்த்தி ,மாநில பொதுச் செயலர்  எம்.இராதாகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஏ. அருள் ,மு. சம்பத் , அழகேசன் மற்றும் மின்சாரம் ,துறைமுகம் , டாஸ்மாக், உழைக்கும் மகளிர் உள்ளிட்ட  சங்கத் தினர் மற்றும் பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்ட நிகழ்வில் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் எம். இரா தாகிருஷ்ணன் பேசியதாவது :
எட்டு மணி நேர வேலை உரிமையை பறித்து, 12 மணி நேர வேலை என தொழிற்த் துறை சட்ட மசோதாவை ஏப். 12 அன்று தமிழ்நாடு சட்டமன்றம் விவாதிக்காமலேயே, குரல் வாக்கெடு ப்பு மூலமே நிறைவேற்றி இருக்கிறது.
கடந்த 137 ஆண்டு காலமாக எட்டு மணி நேர வேலை உரிமையை அனுப வித்து வந்த தொழிலாளி வர்க்கத்தின் மீது கார்ப்பரேட் கம்பெனிகளின் பன்னாட்டு மூலதன குவிப்புக்கு ஏது வாக 12 மணி நேர வேலையாக சட்ட திருத்தத்தை  தமிழக அரசு மேற் கொண்டிருப்பது  ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானதாகும்.
இந்தியாவில் முதன்முதலாகக் கொண்டு வந்த சட்டமே தொழிலாளர் சட்டம் தான் ; 1885 ஆம் ஆண்டுகளி லேயே கொண்டுவரப்பட்டுள்ளது. 1935 ஆம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தில் 8 மணி நேர வேலை உரிமையை வ. சுப் பையா தலைமையில் ஆன தொழிற் சங்கம் 2 உயிர்களை தியாகம் செய்து பெற்றுத் தந்திருந்தது .
எட்டு மணி நேர வேலை உரிமைக்காக வும் மே தினத்திற்கு விடுமுறை வேண் டியும் 1923 லேயே சென்னை கடற்கரை யில் சிங்காரவேலர் ஏற்றிவைத்திட்ட மே தின கொடியேற்றத்தின் நூறாவது ஆண்டை கொண்டாடுகின்ற இந்த தருணத்தில் , அவரின் கோரிக்கை களை கிழித்தெறியும் விதமாக 12 மணி நேர வேலை சட்டத்தை அதே கடற்கரையில் அமைந்துள்ள சட்ட மன்றத்தில் தமிழ்நாடு அரசு சட்ட முன்வடிவை நிறைவேற்றி இருக் கிறது .
இந்த நடவடிக்கைகள் எந்திரத்னமான செயலாகும் ;  இதை ஒருபோதும் தொழிலாளி வர்க்கம் அனுமதித்தி டாது .இதனை அனைத்து தொழிற் சங்களும் ஒன்றிணைந்து போராடி முறியடித்திடும் .
லக்னோவில் கூடிய ஏஐடியுசி மாநாடு இத்தகைய அபாய சூழலை முன்கூட் டியே கணித்து அதனை முறியடிக்க தயாராகுங்கள் என அறிவுறுத்தி இருந்தது ; அந்த மாநாட்டில் இருந்து திரும்பி வருவதற்குள் தொழிலாளி க்கு எதிரான இந்த 12 மணி நேர வேலை சட்டம் அமலாக்கப்பட  முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது .
சமூக நீதிக்கு பாடுபட்ட  பெரியாரைக்  கொண்டாடும் அரசாகவோ, மே தின நூற்றாண்டுக்கு நினைவுச்சின்னம் அமைத்து சிங்கார வேலரை சிறப்பி த்த அரசாங்கமாகவோ தமிழ்நாடு அரசு இல்லை என்பதையே இது உறு திப்படுத்துகிறது.தொழிலாளிகளின் உரிமைகளை பறித்திடும் எந்த ஒரு அரசையும் மண்டியிடச் செய்யும் போராட்டங்களை மேலெடுப்போம்; போராடுவோம், வெற்றி பெறுவோம் என பேசினார்.
ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் தேசிய செயலாளர் டி .எம். மூர்த்தி பேசிய தாவது :எட்டு மணி நேர வேலை உரிமையைத்தான் நாம் மே தினமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். சிக்காகோவில் தான் இதற்கான  போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பார்கள் ; ஆனால் இந்தியாவில் எட்டு மணி நேர வேலைக்காக மெட் ராஸ் லேபர் யூனியனின் பி அண்ட் சி மில் தொழிலாளர்கள் போராடி, 2  தொழிலாளர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளார்கள் .
அதற்கு அடுத்தபடியாக சென்னை துறைமுக தொழிலாளர்கள் போராடி, பன்னிரெண்டு தொழிலாளர்களை துப்பாக்கிக் குண்டுக்கு  பலியிட்டு இருக்கிறார்கள் . தமிழ்நாட்டின் அந்த தொழிலாளர்  தியாகிகள் ஈட்டிக் கொடுத்தது தான் 8 மணி நேர வேலை உரிமை.
புதுச்சேரி ஆங்கிலோ-பிரெஞ்ச் மில்  தொழிலாளர்கள் போராடியதற்காக பீரங்கி குண்டுகளால் தாக்கப்பட்டு உயர்த்தியாகங்கள் செய்திருக்கிறா ர்கள் .இந்தியாவிலும் தமிழ்நாட்டில் இவ்வாறான உயிர் தியாகப் போராட்ட ங்களால்தான் 8 மணி நேர வேலை உரிமையை பெற முடிந்திருக்கிறது.
இதனை மாற்றியமைத்து 12 மணி நேர வேலையாக விஷம் தடவிய இனிப்பு சட்டமாக மோடி அரசு முயற்சி க்கிறது . கார்ப்பரேட்டுகளின் அந்நிய மூலதன முதலீட்டு நிர்பந்தத்திற்காக தமிழக அரசும் கர்நாடக அரசும் 12 மணி நேர வேலையை ஒன்றிய அர சை முந்தி ,சட்டமாக்கிட இப்போதே நடவடிக்கைகளை தொடங்கி விட்டனர்.
2024-ல் தேர்தல் வருகிறது, விவசாயி கள் போராடியது போல தொழிலாளர் களும்  12 மணி நேர வேலையை எதிர்த்து போராட்டம் நடத்தினால் தேர்தல் வெற்றி பாதிக்கப்படும் என ஒன்றிய அரசு சட்டமாக்கலை காலம் தாழ்த்தி வருகிறது . ஆனால் தமிழக அரசு அதனை முந்திக்கொண்டு சட்டம் ஆக்கிடுவோம் என ஏப்ரல் 12 அன்று சட்ட முன்வடிவை குரல் வாக்கெடுப் பின் மூலம்  ஒப்புதல் பெற்றிருக் கிறது.
சமூக நீதி என்பது 8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உறக் கம் என்பதான சமூகநல அக்கறை கொண்டதாக இருக்க ,12 மணி நேர வேலை என்பது அநாகரிமான செயல்; மனித உரிமை மீறலாகும்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு 8 மணி நேர வேலை உரிமையை உலகெங்கும் உத்தரவாதப்படுத்தி உள்ளது .கடந்த 150 ஆண்டுகளாக அடிப்படை வேலை உரிமையாகவே அது அனுபவிக்கப்பட்டு வருகிறது.
இடதுசாரி மதசார்பற்ற ஜனநாயக கூட்டமைப்பை பலப்படுத்திக் கொண் டதனாலேயே ஒன்றிய மோடி அரசால் ஏதும் செய்ய முடியவில்லை .ஆகவே ஒன்றுபட்ட தொழிற்சங்க அமைப்பு களின் போராட்டத்தை மேலெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
ஏஐடியுசி தொழிற்சங்கம் தனித்தும், அனைத்து தொழிற்சங்ககளோடு இணைந்தும் போராடி இத்தகைய தொழிலாளர்கள் சட்டங்களை எதிர் த்து வெற்றி கொள்ளும் என பேசி னார்.
தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சங்காத்தின் பொதுச் செயலாளர் மூர்த்தி ,தமிழ்நாடு டாஸ்மாக் பணி யாளர்கள் சங்கத்தின் பொதுச்செய லாளர் தனசேகரன், சென்னை துறை முக தொழிலாளர் சங்கத்தின் தலை வர் சீனிவாச ராவ், உழைக்கும் மகளிர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சாந்தி உள்ளிட்ட பலரும் கண்டன உரை நிகழ்த்தினர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *