அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி பாராட்டு!.
வீட்டு வசதி துறையில் புதிய அறிவிப்புகள்.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி பாராட்டு!.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் 18 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள தமிழக அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் மாண்புமிகு திரு சு.முத்துசாமி அவர்களுக்கும், வீட்டு வசதி துறையின் செயலாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக கட்டட முடிவு சான்று விரைந்து வழங்கவும், பிணையத் தொகையை முடிவு சான்று வழங்கும்போதே திருப்பிக் கொடுக்கவும் நடவடிக்கை எடுத்தும்,
தமிழ்நாடு விரைவாக நகர்மயமாகும் மாநிலமாக திகழ்வதால், நகர்ப்புற பகுதிகளில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் 2019 இன் படி தற்போது நடைமுறையில் உள்ள விதிகளில் காலச்சூழலுக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டும்,
புதிய மனைப்பிரிவு அமைப்பதற்கு தேவையான அணுகு சாலை அகலத்தை குறைத்து நிர்ணயிக்கவும்,
திறவிட ஒதுக்கீடு எவ்வளவு தேவைப்படுகிறதோ அதற்கு மட்டும் வழிகாட்டு மதிப்பீட்டின்படி தொகையை வசூலிக்கவும்,
ஒன்பது மீட்டருக்கு குறைவான அகலம் கொண்ட சாலையில் அமைக்கப்படும் கட்டடங்களுக்கு உயர்தரப்பு குறியீடு வழங்கவும்,
அதிக உயரம் இல்லாத கட்டட வகையைச் சார்ந்த கட்டடங்களுக்கு தற்போதுள்ள உயரத்தை கூடுதலாக கொடுக்கவும்,
கட்டட முடிவு சான்று பெற விலக்கு பெறுவதற்கு குடியிருப்புகளின் எண்ணிக்கையை அதிகபட்ச பரப்பளவு நிர்ணயிக்கவும்,
அனுமதி வழங்கும் இனங்களில் பொதுப் பட்டா உள்ளவற்றிற்கு அனுமதிப்பது போன்று, இணையாக நத்தம் பகுதியில் தோராயப் பட்டா, நிரந்தரப் பட்டாவிற்கும் வளர்ச்சி திட்டங்களுக்கும் அனுமதி வழங்கவும்,
அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் மற்றும் விதிமீறல் கட்டடங்கள் பெருகுவதை தடுக்கவும், தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் மற்றும் புவியியல் தகவல் தொகுப்பு வசதிகளை பயன்படுத்தி விதிமீறல் கட்டடங்களை கண்டறிந்து ஒழுங்குபடுத்தவும் தனி அமலாக்க பிரிவை உருவாக்கியும்,
மாநிலத்தின் தற்போதுள்ள 7 சதவீத திட்டப் பகுதி நிலப்பரப்பை 22 சதவீதமாக அதிகரிக்க முழுமை திட்டங்கள் மற்றும் புது நகர் வளர்ச்சி திட்டங்களை தயாரித்தும்,
புராதானக் கட்டடங்கள் அமைந்த இடங்கள் மற்றும் பழங்கால கட்டடங்கள் அமைந்த பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றை தொடர் கட்டட பகுதிகளாக முழுமை திட்டத்திற்குள் சேர்க்கவும்,
மலையிடப் பகுதிகளில் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்கு தற்போது பயன்பாட்டில் உள்ள பல்வேறு விதிகளை மறுஆய்வு செய்து மலைப்பகுதிகளுக்கென ஒருங்கிணைந்த விதிகளை உருவாக்கியும்,
நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் உள்ள வரைபடம் மற்றும் ஆவணங்களை கணினி வழியாக பிரதி எடுக்கவும்,
கூட்டு உள்ளூர் திட்டப் பகுதியாக இதுவரை அறிவிப்பு செய்யப்படாத நகராட்சி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கி கூட்டு உள்ளூர் திட்டப் பகுதிகளாக அறிவிப்பு செய்யவும்,
சுயநிதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் காஞ்சிபுரம் மற்றும் சென்னை பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான திட்டங்களை அறிவித்தும்,
மனைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதற்கான திட்டத்தையும்,
கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான இடங்களில் பல்வேறு வணிக வளாகம் கட்டுவதற்கான திட்டத்தையும்,
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் கூட்டுறவு சங்கங்களில் இ-சேவை மையத்தையும்,
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் எரிபொருள் நிரப்பும் மையத்தையும்,
ஒருங்கிணைந்த QR பயணச்சீட்டு மற்றும் பயணத்திட்டமிடலுக்கான செயலி திட்டத்தையும்,
டிஜிட்டல் சென்னை திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த நகர்ப்புற தரவு மையம் மற்றும் நகர்ப்புற திட்டப்பணியின் திட்டமிடுதல் மற்றும் மேலாண்மை தொகுதி ஆகியவற்றை உருவாக்க விரிவான திட்ட அறிக்கையை தயாரித்தும்,
மனை வரன்முறை சட்டம் கால நீட்டிப்பு திட்டம் உள்ளிட்டபல்வேறு திட்டங்கள் பரிசீனையில் உள்ளது ,
இப்படி மாநிலத்தின் வளர்ச்சிக்கு எண்ணற்ற பல்வேறு செயல் திட்டங்களையும், ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளையும் அறிவித்துள்ள தமிழக அரசுக்கும், முதல்வருக்கும், அமைச்சருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் தேசிய தலைவர் டாக்டர்.ஆ.ஹென்றி அவர்கள் உளமார்ந்த பாராட்டுகளையும், இதயபூர்வமான வாழ்த்துகளையும், நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.