Today’s Rasi Palanfor April12,2023- இன்றைய ராசிபலன்கள்

Loading

மேஷம்

புதிய பொறுப்புகளை அடைவீர்கள். குழப்பமும் சந்தேகமும் இல்லாமல் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மறைமுகமாக மட்டம் தட்ட நினைப்பவர்களுக்கு நல்ல பாடம் கற்பிப்பீர்கள். பாராட்டும் பதவியும் உங்களைத் தேடி வந்து மகிழ்ச்சி அடைவீர்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்வீர்கள். வியாபாரத்தில் லாபம் பெறுவீர்கள்.

ரிஷபம்

கவனமாக நடக்காவிட்டால் கையில் இருக்கும் பணத்தை இழப்பீர்கள். எதையும் குறுக்கு வழியில் அடைய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நியாயம் உங்கள் பக்கம் இருந்தாலும் ஆறப்போட்டு அவசியமான வார்த்தைகளைப் பேச மறக்காதீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் பாதகம் அடைவீர்கள். சந்திராஷ்டமம் நாள். நிதானமாக செயல்பட தவறாதீர்கள்.

மிதுனம்

பழைய கடன்களைச் சுலபமாக பைசல் செய்வீர்கள். இளம் வயதினர் தன்னிச்சையாக முடிவு எடுக்காதீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி நிலவி சங்கடங்கள் மறைந்து தன்னம்பிக்கையுடன் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். தொழிலுக்கு வேண்டிய உதவிகளை பெறுவீர்கள். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். அரசுப் பணியில் பதவி உயர்வு, சம்பள உயர்வு அடைவீர்கள்

கடகம்

சுணங்கிக் கிடந்த வீட்டு வேலைகளை சுறுசுறுப்பாக நடத்துவீர்கள். சுபகாரியத் தடைகள் நீங்கி சொந்தங்களை வரவழைப்பீர்கள். ரத்த உறவுகள் இடையே உங்கள் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். வியாபாரத்தில் இனந்தெரியாத எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். தொழில் போட்டிகளை வெற்றிகரமாக முறியடிப்பீர்கள். முக்கிய கடன்களை சிரமப்பட்டு அடைப்பீர்கள்

சிம்மம்

வேலை இடங்களில் இருந்த சிக்கலை விலக்குவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவீர்கள். பிறரின் தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் அளவோடு ஈடுபடுவீர்கள். போட்டி பந்தயங்களில் இருந்து விலகி விடுவீர்கள். ஐடி ஊழியர்கள் அதிக எச்சரிக்கையுடன் பணியாற்றுவீர்கள். பிறரை நம்பி காரியம் செய்யாதீர்கள்

கன்னி

இல்லத்தில் நல்ல காரியங்கள் நடக்க ஏற்பாடு செய்வீர்கள். உண்மையான நண்பர்களால் உதவி பெறுவீர்கள். வெளியூர்ப் பயணங்களளில் தொழிலுக்குச் சாதகமான பலனை அடைவீர்கள். அரசுத்துறை சம்பந்தப்பட்டவர்கள் அற்புதமான வாய்ப்பை பெறுவீர்கள். பண வரவுகளை சீர்படுத்துவீர்கள். பங்குப் பரிவர்த்தனையில் லாபம் பெறுவீர்கள்.

துலாம்

பணியிடத்தில் உங்கள் பொறுமைக்குப் பரிசாக உயர்வு ஏற்பட்டு உற்சாகமடைவீர்கள். திட்டமிட்டு நேரம் தவறாமல் செயல்படுவீகள். பணத்தைக் கையாளும் போது கூடுதல் கவனத்தோடு செயல்படுவீர்கள். அலுவலக ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். காதலியின் அரவணைப்பால் களிப்படைவீர்கள். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

விருச்சிகம்

தோல்வியில் துவண்டு இருந்த நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாவற்றிலும் ஏற்றம் பெறுவீர்கள். வார்த்தை வசியத்தால் மரியாதையை கூட்டுவீர்கள். வெளிச் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள். மனைவியின் குதிகால் வலிக்கு தீர்வு ஏற்பட்டதால் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலுக்குத் தேவையான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள்.

தனுசு

வங்கியில் எதிர்பார்த்த கடன் சம்பந்தப்பட்ட விவரங்களில் இழுபறி ஏற்பட்டு சிரமப்படுவீர்கள். தொழில் வரியை முறையாக செலுத்த மறக்காதீர்கள். வேலை இடங்களில் வீண் விவாதங்கள் செய்யாதீர்கள். வியாபாரம் மந்தமாக நடப்பதால் மனக்கவலை அடைவீர்கள். குடும்பத்தினர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடப்பதால் மனச்சஞ்சலம் கொள்வீர்கள்.

மகரம்

சட்டத்திற்குப் புறம்பான நிலங்களை வாங்காதீர்கள் . பங்குச்சந்தை வியாபாரத்தில் பாதகமாக நிலையை பார்ப்பீர்கள். கொடுத்த கடனை திருப்பிக் கேட்டால் பகைக்கு ஆளாவீர்கள். நண்பர்களிடம் வாங்கிய கடனை செலுத்தி நாணயமாக நடந்து கொள்ள மறக்காதீர்கள். வேலை செய்யும் இடத்தில் விழுந்து கை கால்களளில் சிறிய காயமடைவீர்கள்.

கும்பம்

பேச்சுவார்த்தை மூலமாக பெரிய சாதனை புரிவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கி பெண்களை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். படிப்பிற்காக பிள்ளைகளை வெளிநாடு அனுப்ப ஏற்பாடு செய்வீர்கள். பங்குச் சந்தை முதலீடுகளில் லாபத்தை அடைவீர்கள். வியாபாரத்திற்காக கேட்ட பணத்தை பெறுவீர்கள். காதலியின் மனம் கோணாமல் அன்பாக நடப்பீர்கள்.

மீனம்

இரக்க சிந்தனையோடு ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வீர்கள். உறவுகளைப் பலப்படுத்த உற்சாகமாகப் பேசுவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு பக்கபலமாக இருப்பீர்கள். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். வெளியூர்ப் பயணங்களின் மூலம் தொழிலுக்குத் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். புதிய வீடு கட்ட திட்டமிடுவீர்கள்.

 

 

 

 

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *