என் தந்தையே ஆபாச நடிகை என்று அழைத்தார்

Loading

என் தந்தையே ஆபாச நடிகை என்று அழைத்தார் : உர்பி ஜாவேத் வேதனை

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை உர்பி ஜாவேத். உர்பி ஜாவேத் வித்தியாசமான கவர்ச்சி ஆடைகள் அணிந்து தன்னை தனித்துவமாக காட்டி வருகிறார். குறிப்பாக கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், நூல் போன்றவற்றை ஆடைபோல் மாற்றி உடலை மறைத்து எடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் பெரிய அளவில் வைரல் ஆகின. உர்பி ஜாவேத் அணியும் கவர்ச்சி உடைகளுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தாலும் அவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தன் தந்தையை தன்னை ஆபாச நடிகை என்று அழைத்ததாக உர்பி ஜாவேத் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, எனக்கு 15 வயது இருக்கும் போது என்னுடைய புகைப்படத்தை யாரோ ஆபாச வலைதளத்தில் வெளியிட்டு விட்டனர். அதன்பிறகு என்னை ஆபாச நடிகை என்று கூறி என் தந்தை சித்திரவதை செய்தார். அதன் பிறகு தற்கொலை செய்யலாம் என முடிவெடுத்தேன். அந்த தருணத்தில் என் வாழ்க்கைக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்க முடிவு செய்தேன். இதனால், 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறி டெல்லிக்கு வந்துவிட்டேன்.

கொஞ்சக் காலம் கால்சென்டரில் பணிபுரிந்தேன். பிறகு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தேன். அதன் பின் சில சீரியல்களில் நடித்தேன். அந்தச் சமயத்தில் எனக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதிலிருந்து ஒரே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்டேன்.
இருந்தாலும், தற்போது எனக்குக் கிடைத்திருக்கும் இந்தப் புகழுக்குக் காரணம் அந்த ஒரு வார பிக் பாஸ் வாய்ப்புதான்” என்று கூறினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *