இன்றைய ராசிபலன்

Loading

மேஷம்
சில கிரகமாற்றங்களின் சஞ்சாரத்தால், உங்கள் சொந்த இடம் பாதிக்கப்படும். குறிப்பாக, இன்று நீங்கள் உங்களது உள்ளுணர்வினையும், அறிவுக்கூர்மையினையையும் உணர்வீர்கள். குழப்பங்கள் விரைவில் அகலும். மேலும், இதுவரை உங்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தி தடுத்து நிறுத்திய சில ஆபத்தான தொடர்புகளை அகற்றும் நேரம் இதுவென்பதை நீங்கள் கண்டறிவீர்கள். இதுவரை உங்களை அழுத்திக்கொண்டிருந்த ஒரு கவசத்தை தூக்கி எறிந்ததைப் போன்று நீங்கள் உணர்கிறீர்கள். இப்போது, நீங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய ஒரு தெளிவான யோசனையைப் பெறமுடிகிறது.

ரிஷபம்
நீங்கள் இன்று கடும் போட்டியின் நடுவே இருக்கிறீர்கள். கடந்த காலங்களின் அனைத்து இன்னல்களையும் மாற்ற, ஒரு திட்டத்தை நீங்கள் வகுக்க வேண்டும். உங்களது நெருங்கிய நண்பர் ஒருவர் உங்களை உற்சாகப்படுத்திக் கொண்டே உங்கள் அருகில் இருப்பார். அவர்களுக்கு அன்பையும், பாராட்டையும் தெரிவியுங்கள்.

மிதுனம்
இன்று, உங்களுக்கு சில பின்னடைவுகள் ஏற்படும். உங்களுக்கு நண்பர்கள் உதவி செய்வார்கள். நீங்கள் விரும்பாவிட்டாலும் அன்பாகவும், உற்சாகமூட்டும் வார்த்தைகளைப் பேசுவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையின் பல சூழல்களில் உடனடி முன்னேற்றத்தைக் காண இப்போது நேரம் சாதகமாக இருக்கிறது. மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வெட்கப்பட வேண்டாம். உங்களுக்கு சவால்களை முறியடிக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால், அதிகமாக நன்மைகளே ஏற்படும். நீங்கள் அதிகமாகப் பேசாத குடும்பத்தினர் மற்றும் நண்பரிடம் பேசி சமாதானமாகச் செல்லுங்கள். இது உங்கள் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க உதவும்.

கடகம்
ஒரே மாதிரி செய்ய வேண்டிய விஷயங்களைச் மாற்ற வேண்டியதன் அவசியத்தை நீங்கள் உணர்ந்தால், நீங்கள் இன்று ஒரு துணிச்சலான முடிவை எடுத்துள்ளீர்கள். இது உங்களுக்கான விமர்சனத்தை வெளியே கொண்டு வரலாம். எது நடந்தாலும், அந்த முடிவை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளீர்கள். உங்கள் கனவை அடையும் வரை தொடர்ந்து முயற்சி செய்யப் பயப்பட வேண்டாம். இன்று உங்களை எரிச்சலூட்டி கோபப்படுத்தும் விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் மனநிலையைச் சரியாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதைச் சரியாகக் கையாள விட்டால், அது உங்களது நெருங்கிய உறவைக் கூட முறித்து விடக்கூடும்.

சிம்மம்
வாழ்க்கையில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களைக் கண்மூடித்தனமாக நம்பத் தொடங்கினால், நீங்கள் கண்டிப்பாக இதயம் நொறுங்கிப் போகும் அளவுக்கு வலிகளைப் பெறுவீர்கள். பணம் மட்டுமே உங்கள் வாழ்க்கையின் இறுதி இலக்காக இருக்கும்போது, உங்கள் கவனத்தை ‘பணம் சம்பாதிப்பதில்’ இருந்து விலகி உங்கள் திறமைகளை அதிகரிக்கும் செயல்களில் கவனம் செலுத்தவும். இதுபோன்ற விஷயங்களை எப்போதும் உங்கள் உள் மனது எச்சரித்துக் கொண்டே இருக்காது, அதனால், அற்ப விஷயங்களை ஒதுக்கி வைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இது மட்டுமே வாழ்க்கையில் உங்களை மெதுவாகச் செல்ல வைக்கும்.

கன்னி
உலகம் உங்களுக்கு மிகச் சிறந்த இடமாக இருக்க வேண்டுமா? எல்லோரும் உங்களுக்கு எப்போதும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. உங்கள் சொந்த அறிவுக்காக நீங்கள் அதைச் செய்ய வேண்டும் அல்லது புறக்கணிக்க வேண்டும். உங்களைச் சுற்றி உள்ளவர்களிடம் சில பெரிய மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த மாற்றங்களை ஆரம்பத்தில் நீங்கள் சங்கடமாக உணரலாம், ஆனால் கூடுதல் நேரம் எடுத்து நீங்கள் அந்த மாற்றத்தைச் செய்ய நீங்கள் விரும்புகிறீர்கள்.

துலாம்
இன்றைய நாளில் தாராள மனப்பான்மையுடன் செயல்படுவது மிகவும் அவசியம். முகத்தில் புன்னகையை மட்டும் வைத்துக் கொண்டு, முரட்டுத்தனமாகவும், இரக்கமற்ற மனிதராகவும் இருக்கக் கூடாது. நேர்மறை ஆற்றலுடன் இருப்பது இந்த நாள் முழுவதையும் நல்ல நாளாக மாற்ற உங்களுக்கு உதவும். இதன் மூலம் நிறைய நல்ல விஷயங்களால் நீங்கள் ஈர்க்கப்படுவீர்கள். ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டு, பயம் காரணமாக கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டாம். உங்கள் பொருளாதார நிலைமை நிலையாக இருக்கிறது. ஆகையால், எதிர்காலத்திற்கான புதிய முயற்சிகள் பற்றிச் சிந்திக்கத் தொடங்குங்கள்.

விருச்சிகம்
அளவிற்கு மிஞ்சிய தேவையற்ற செலவுகள் அல்லது ஆடம்பரத்தால் மட்டுமே மக்களை ஈர்க்க முடியாது. இவை அதிக காலம் நீடிக்காது. மாறாக, அவைகளின் தேவைகளுக்க்காக நீங்கள் முனைந்திருக்கும் வரை மட்டுமே இது நீடிக்கும். உங்களது செலவில் தான் அனைத்து விஷயங்களும் பிரகாசமாகத் தெரிகின்றன. கடந்த சில நாட்களாக, நீங்கள் உருவாக்கிக் கொண்ட ஆடம்பரமான பிம்பத்திற்கு இது உத்தரவாதம் அளிக்காது. எனவே, அதனைக் குறைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் தொழில் அல்லது கல்வி போன்றவற்றில் கவனம் செலுத்துவதற்காக, உங்களுக்கு பிடித்ததும், இன்பத்தை அளிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும், பொழுதுபோக்கு அம்சங்ககளையும் கூட விட்டுவிடுங்கள். எந்த விளையாட்டிலும் ஈடுபடாமல், எப்போதுமே வேலை செய்து கொண்டிருப்பது உங்கள் உடல்நலத்தை கடுமையாக பாதிக்கும். எனவே, அது உங்களை பாதிக்கும் முன்பு, ஏதாவது செய்ய முயலுங்கள்.

தனுசு
மன அழுத்தம் மற்றும் பதற்றம் உங்களை ஆட்கொள்வதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். நீங்கள் அதிகமாகச் சிந்திக்க முயல்கிறீர்கள். அதிகமாகச் சிந்திக்க முயலும் போது, சிந்தனைக்கும், கவனம் செலுத்துவதற்கும் இடையேயான வரைமுறைகள் என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யுங்கள். ஆனால், உங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் உறுதியாக இருப்பவர்களிடம் இருந்து விலகியே இருங்கள். உங்களை விரும்பும் ஒருவர், இன்று உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பார். இன்று அவர்களிடம் அன்பாகப் பேசுங்கள்.

மகரம்
நீங்கள் எதையாவது இழக்கும் விளிம்பில் இருக்கும் போது, வெறுமனே உங்கள் உணர்ச்சிகளை மறைப்பது உங்களுக்குப் பயன் தராது. எனவே, நீங்கள் அதற்குரிய பலனை அடைவதற்கு முன்பு, உங்கள் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். இன்று உறவுகளுடன் நேரம் செலவிடுவது மிகவும் முக்கியம். அறிவார்ந்த உரையாடல்கள் நிறைய விஷயங்களைப் பற்றிய உங்கள் அறிவை அதிகரிக்கும்.

கும்பம்
இன்று, உங்களது சமூக நிலைப்பாடு துடிப்பானதாகவும், உந்துதலாகவும் இருக்கும். எனவே, களிகூருங்கள். மேலும், உங்களது முகத்தை சிறப்பாக வெளிக்காட்டிக் கொள்ளுங்கள்! நீங்கள் காற்றிலே பறந்து செல்லும் பட்டாம்பூச்சி போன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இது உங்களுக்கு நடக்காது, செயலாற்றாது என்று தவறாக இருந்துவிடாதீர்கள். இதனால், நீங்கள் சில சவால்களையும் எதிர்கொள்வீர்கள். விடாமுயற்சியைக் கொண்டிருங்கள் அப்போது, வெற்றிக்கோப்பை மிக விரைவில் உங்களை அடையும். ஆகவே, கடினமாக உழையுங்கள்!

மீனம்
வாழ்க்கையில் உங்களுக்குத் தேவையானதைப் பற்றி, நீங்கள் எப்போதாவது ஒரு யதார்த்தமான எதிர்பார்ப்பைப் பெற்றிருக்கிறீர்களா? அப்படி இல்லையென்றால், அது பற்றி இன்று சிந்திக்க வேண்டிய நேரம் இது. உங்களது பலத்தில் கவனம் செலுத்துங்கள், இன்று உங்கள் எதிர்பார்ப்புகளைப் பற்றித் தெளிவாகச் சிந்தியுங்கள். உங்கள் உறவுகளில் நிறைய ஏற்ற, இறக்கங்கள் உள்ளது. நீங்கள் சிறிய விஷயங்களை ஆழமாகத் தோண்டி பார்ப்பதை நிறுத்தி, விட்டுவிட வேண்டும். இன்று உங்கள் வாழ்க்கை போட்டி நிறைந்ததாக உள்ளது. வாழ்க்கையில் போட்டிக்கும், உறவுக்கும் இடையிலான நுட்பமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள நேரம் ஒதுக்குங்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *