திருவள்ளூர் எம்எல்ஏ., நகர மன்றத் தலைவர் சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்றி விழிப்புணர்வு :

Loading

திருவள்ளூர் நகராட்சி சார்பில் நகரங்களுக்கான  தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற அடிப்படையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நகராட்சி ஆணையர் கா.ராஜலட்சுமி, நகர்மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் ஆகியோர் பொது மக்களின் பங்களிப்போடு நகரை சுத்தமாக வைத்துக் கொள்வது, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் நகர்ப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில்  மொத்தம் 427 தெருக்கள் உள்ளன.  இந்த 427 தெருக்களையும் தூய்மைப்படுத்த 173  துப்புரவுப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த என் குப்பை என் பொறுப்பு திட்டம் குறித்து பொது மக்களிடையே மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவிகளிடம் விழிப்புணர்வு  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் மாணவ மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் நகராட்சி நிர்வாகம்,  தூய்மை மக்கள் இயக்கம் சார்பில்  என் குப்பை என் பொறுப்பு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம் 26-வது வார்டில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை தாங்கினார்.  திருவள்ளூர் எம்எல்ஏ, வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன்,  முன்னாள் நகர மன்றத் தலைவர் பொன்.பாண்டியன், நகராட்சி பொறியாளர் நாகராஜ்,  நகர மன்ற உறுப்பினர் எஸ்.தனலட்சுமி,  சுகாதார அலுவலர் கே.ஆர்.கோவிந்தராஜூ,  சுகாதார ஆய்வாளர்கள் சுதர்சன், வெயிலுமுத்து  மற்றும்  மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டு அதிக குப்பை தேங்கியுள்ள இடத்தில் சுத்தம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் 173 துப்புரவுப் பணியாளர்கள் வீடுதோறும் சென்று மக்கும் குப்பை மக்காத குப்பை ஆகியவற்றை பெறுகின்றனர்.  ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் தரம்பிரிக்காமல் வழங்குவதாக கூறப்படுகிறது. எனவே துப்புரவுப் பணியாளர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும்,  பொது இடங்களில், சாலை ஓரங்களில், வீடு அருகில் குப்பைகளை கொட்டக் கூடாது என்றும் அவ்வாறு கொட்டுவது தெரியவந்தால் அந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும், குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவதை வீடியோவாக  எடுத்து நகராட்சிக்கு அனுப்பினால் ரூ.200 சன்மானம் வழங்கப்படும் எனவும் நகர்மன்றத்தலைவர் உதயமலர் பாண்டியன் தெரிவித்தார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *