குறைகளையும் தீர்த்து வைப்பேன் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் உறுதி
தூத்துக்குடி 19வது வார்டு பகுதியில் அனைத்து குறைகளையும் தீர்த்து வைப்பேன் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் உறுதி
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு வார்டாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
மாநகராட்சி 19வது வார்டுக்குட்பட்ட மகிழ்ச்சிபுரம், விநாயகர் கோவில் அருகில் பொதுமக்களிடம்; கோரிக்கை மனுக்களை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக்கொண்டார். அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி, விதவை உதவித்தொகை, தையல் மிஷின், பல்வேறு உதவிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
பின்னர் அப்பகுதியில் உள்ள தெருக்களில் மழை காலங்களில் தேங்கிய மழைநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய்கள் உருவாகின்றன. அதை அப்புறப்படுத்தி தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பொதுமக்களிடம் கூறுகையில் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முறையாக எந்த பணிகளும் நடைபெறவில்லை. இப்பகுதி முழுமையான வளர்ச்சியை நோக்கி செல்லாத நிலை இருந்துள்ளது இனி வரும் காலங்களில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அனைத்து தரப்பினருக்கும் ஏற்றவாறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு உங்களது பகுதியில் உள்ள அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன். என்று உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் அன்னலெட்சுமி, உதவி ஆணையர் சேகர், சுகாதரா ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியராஜ், கவுன்சிலர் டாக்டர் சோமசுந்தரி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார் என்ற செல்வின், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, துணை அமைப்பாளர் மணி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வார்டு அவைத்தலைவர் முனியசாமி, வட்ட செயலாளர் பத்மாவதி, துணைச்செயலாளர்கள் மாரிமுத்து, பாலசுப்பிரமணியன், பரமசிவம், பொருளாளர் சீனிபாய், வட்டப்பிரதிநிதிகள் மேகநாதன், அமிர்தலிங்கராஜ், சுடலை, செபஸ்டீன், நிர்வாகிகள் மாடசாமி, ஹரிராம், ராமர், பெருமாள், சுடலைமணி, அந்தோணி ராஜன், முருகன், மற்றும் பாஸ்கர், மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.