மக்கள் குறைதீர் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!
ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் வாரம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் நேரில் புகார் மனு பெறப்பட்டு உரிய விசாரணை மேற்கொள்ளப்படுவது வழக்கம் இதைத் தொடர்ந்து நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஹெச் கிருஷனுண்ணி ஐஏஎஸ் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட வேலைவாய்ப்பு குறித்து மனு ,கணவனால் கைவிடப்பட்டோர் ,ஆதரவு அற்றோர் ஆகியோர் உதவித்தொகைக்காக பெறப்பட்ட மனுக்கள், இலவச வீட்டுமனை பட்டா கோரி மனு ,வாரிசு சான்றிதழ் கேட்டு மனு தொழில் கடன் சாலை வசதி அடிப்படை வசதி மேம்படுத்த மனு குடிநீர் வசதி மாற்று திறனாளிகள் கோரிக்கை மனு என மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 237மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடன் வழங்கப்பட்டு தீர்வு ஏற்படுத்த உத்தரவு பிறப்பித்தார் மேலும் தமிழக முதல்வர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் அமைச்சர் பெருமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் ஆகியவற்றின் மூலம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார் தமிழ்நாடு நகர்ப்புற வாழ் வி எல் நலம் மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ எட்டு புள்ளி 42 லட்சம் மதிப்பீட்டில வீடு வழங்கும் ஆணையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார் மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று நபர்களுக்கு 1520 மதிப்பீட்டில் ஊன்றுகோல் மற்றும் ஒரு நபருக்கு ரூ.1,000 மதிப்பு 600 மதிப்பீட்டில் ஒரு ஊன்றுகோல் என ரூ 5160 மதிப்பீட்டில் நான்கு நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் குமரன், துணை ஆட்சியர் பயிற்சி பொன்மணி உதவி ஆணையர் (கலால் )சிவகுமாரன் ற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.