கந்து வட்டி தினம் தினம் பெருகி கொண்டுவருகிறது.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று முந்தினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுவதாவது குமரி மாவட்டத்தில் கந்து வட்டி தினம் தினம் பெருகி கொண்டுவருகிறது. இது தொடர்பாக புகார் அளிப்பதற்கு பல முறை காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது. இருந்த போதும் பொதுமக்கள் புகார் அளிக்க முன்வர தயங்கி வருகின்றனர். காவல் நிலையங்கள் சென்று புகார் அளிக்க பொதுமக்களின் தயக்கத்திற்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது நேரடி பார்வையில் குமரி மாவட்டத்தில் உள்ள 33 காவல் நிலையங்களிலும் 360 டிகிரி கேமராக்கள் பொறுத்தப்பட்டு அதனை கட்டுப்பாட்டு அறை மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றது . பொது மக்கள் கந்து வட்டிக்கு எதிரான புகார் மனுக்களை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் நேரடியாக புகார் கொடுக்கலாம் எனவும் தங்கள் புகார்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுவித்தார்..