கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. பண்ருட்டி சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம்
![]()
பண்ருட்டி.ஏப்.11. கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. பண்ருட்டி சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன், தலைமையில் பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர செயலாளர் இராஜேந்திரன், முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பண்ருட்டி சட்டமன்ற தொகுதி மேற்பாவையாளராக வேதாரண்யம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன், கலந்து கொண்டனர். திருவாரூரில் நடைபெறும்
முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவில் திரளாக கலந்து கொள்வது, மரக் கன்றுகளை நடுவது,
புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பது, பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்த்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் தண்டபாணி, மாவட்ட துணை செயலாளர்கள் தணிகை செல்வம், ஆனந்தி சரவணன், அண்ணா கிராம ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன்,மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் கதிர்காமன்,நெல்லிக்குப்பம் நகர செயலாளர் மணிவண்ணன்,தொரப்பாடி பேரூர் செயலாளர் சுந்தரவடிவேலு, பட்டாம்பாக்கம் பேரூர் செயலாளர் ஜெயமூர்த்தி, பண்ருட்டி நகர அவை தலைவர் ராஜா, நகர பொருளாளர் ராமலிங்கம். நகர துணை செயலாளர் கௌரி அன்பழகன், பண்ருட்டி நகர மன்ற துணை தலைவர் சிவா,மாவட்ட பிரதிநிதிகள் சரவணன்,பிரபு, நகர வழக்கறிஞர் அணி பரணி சந்தர், நகர துணை செயலாளர்கள் சீனிவாசன், சசிகுமார் மற்றும் இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத், துணை அமைப்பாளர்கள் பார்த்திபன்,பாலச்சந்தர், மதியழகன், ராஜா, கிரி மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

