இன்றைய ராசிபலன்
மேஷம்
இன்று எதிலும் பொறுமையுடனும் சிந்தித்தும் செயல்படவேண்டிய நாள். முக்கிய முடிவுகள் எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவ சியம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். விநாயகரை வழிபடுவதன் மூலம் அனுகூலப் பலன்களைப் பெறலாம்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.
மிதுனம்
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். அதனால் நன்மையே ஏற்படும். எதிர்ப்புகளும் இடையூறுகளும் நீங்கும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வரு வார்கள். பிற்பகலுக்கு மேல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிவபெருமானை வழிபட்டு இன்றைய நாளைத் தொடங்க நன்மைகள் அதிகரிக்கும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வ வழிபாடுகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.