ஆங்கில மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது.

Loading

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் சத்தியநாதபுரம் ஊராட்சி கொட்டாயூர் கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது.
கொட்டாயூர் கிராமத்தில் முனுசாமி வயது 60 என்பவர் தனியார் கிளினிக் நடத்தி வருகிறார்,இவர் பி.எஸ்.சி பட்டப்படிப்பு வரை மட்டுமே படித்துவிட்டு,முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல் 1987 ஆம் ஆண்டு முதல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.மேலும் வெளிநாட்டில் மருத்துவ படிப்பு படித்துள்ளதாகவும்,விருது பெற்றுள்ளதாகவும் விளம்பர பலகை வைத்துள்ளார்.
இந்த நிலையில் இவரிடம் மருத்துவ சிகிச்சைக்காக வரும் பொது மக்களுக்கு அதிக அளவு உள்ள டோஸ் மருந்து செலுத்துவதாகவும்,மது அருந்திவிட்டு ஊசி போடும் பொழுது கைகள் நடுக்கம் ஏற்பட்டு வருவதாகவும் இதனால் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன,மேலும் சிகிச்சைக்கு வருபவர்களிடம் 1000 ரூபாய் 2000 ரூபாய் என அதிகளவில் பணம் வசூலிப்பதாக மருத்துவ துறைக்கு புகார்கள் சென்றது.
இது தொடர்பாக இன்று மருத்துவத்துறை துணை இயக்குனர் சாந்தி கொட்டாயூரில் உள்ள தனியார் கிளினிக்கில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்,அப்பொழுது உரிய ஆவணங்கள் இன்றியும்,முறையாக மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது,இதனை அடுத்து போலி மருத்துவர் முனுசாமி கைது செய்யப்பட்டார்.
0Shares

Leave a Reply