எடப்பாடி பழனிச்சாமி உறுப்பினர் படிவத்தை வழங்கினார்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து அதிமுக உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனை அடுத்து மாவட்டச் செயலாளர்களுக்கு சென்னையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுப்பினர் படிவத்தை வழங்கினார்.
இதனையடுத்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா கலந்து கொண்டு ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகளிடம் உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினார். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை யடுத்து உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக செயல்பட வேண்டும் என நிர்வாகிகளிடம்முன்னாள் அமைச்சர் பி.வி ரமணா தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பூண்டி எஸ்.மாதவன் கடம்பத்துார் சூரகாபுரம் சுதாகர், திருவாலங்காடு சக்திவேல், திருத்தணி இ.என். கண்டிகை ஏ.ரவி, பள்ளிப்பட்டு டி.டி சீனிவாசன்,பொதட்டூர்பேட்டை பேரூராட்சி ஏ.ஜி ரவிச்சந்திரன், பள்ளிப்பட்டு பேரூராட்சி மி.ஜெயவேல், திருவள்ளூர் நகர செயலாளர் ஜி கந்தசாமி திருத்தணி நகர செயலாளர் சௌந்தர்ராஜன், நிர்வாகிகள் ஆர்டிஇ சந்திரசேகர், ஆர்.இளங்கோவன், வேல்முருகன் எழிலரசன் தியாகு குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.