ர்.கே.நகர் கிழக்கு பகுதி தி.மு.க உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி 43வது வட்டத்தில் தி.மு.க உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
திராவிட முன்னேற்றக் கழக பவளவிழா ஆண்டு மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி ஜீரத்தினம் சாலை வட்ட கிளை அலுவலகம் அருகே 43வது வட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் சேர்த்தல் முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் தா.இளைய அருணா,ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் ஆகியோர் வருகைந்து கழக கொடியேற்றி,கலைஞரின் திருவுருவ படத்திற்க்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி உறுப்பினர் சேர்க்கை முகாமினை துவக்கிவைத்தனர்.இதனையடுத்து உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கி கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.இதில் நந்தனம் நம்பிராஜன்,இரா.லட்சுமணன்,இரா. வெற்றிவீரன்,பகுதி கழக நிர்வாகிகள் ஆர்.டி.ராஜா,கே.பாலு,மு.வேதலட் சுமி,பி.கே.சதீஷ்குமார்,எஸ்.பி. எஸ்.புத்தன்,வெ.சு.சத்யநாராயணன் ,ஜே.பிரேம் ஆனந்த்,சா.திருப்பதிச்சாமி மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள்,பகுதி கழக நிர்வாகிகள்,வட்டக் கழக நிர்வாகிகள்,அணியின் அனைத்து அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள்,BLA2,பாக முகவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.