மத்திய அமைச்சர்களிடம் விருது பெற்ற  ஊராட்சி தலைவர்கள்

Loading

மத்திய அமைச்சர்களிடம் விருது பெற்ற  ஊராட்சி தலைவர்கள்!
பரமத்தி ஒன்றியத்தில் சிறப்பாக பணி  ஆற்றிய ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான விருது டெல்லியில் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூடச்சேரி ஊராட்சி தலைவர் சுப்பிரமணி, சீராப்பள்ளி ஊராட்சி தலைவர் வாசு, வீரணம்பாளையம் ஊராட்சி தலைவர் லலித், மாணிக்கநத்தம் ஊராட்சி தலைவர் வேலுச்சாமி, மணியனூர் ஊராட்சி தலைவர்
சாந்தி,  மேல்சாத்தம்பூர் ஊராட்சி தலைவர் லோகாம்பாள், இராமதேவம் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பலர் டெல்லியில் நடைபெற்ற தலைவர்களுக்கான கூட்டமைப்பு சார்பில் மத்திய அமைச்சர்களிடம் விருது பெற்றனர்.இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங்,
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும்  விருது வழங்கினர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *