ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் அகழாய்வு பணிகள்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு :
திருவள்ளூர் மாவட்டம் பட்டறைப்பெரும்புதூர் கிராமத்தில் தொல்லியல் துறை சார்பாக தொல்லியல் ஆய்வுக் குழுவினரால் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வின் மூலம் கற்காலம் முதற்கொண்டு பயன்படுத்தப்பட்ட பல்வேறு தொல்பொருள்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, இவ்விடத்தின் தொல்லியல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தொல்லியல் துறை சார்பாக ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் இவ்விடத்தில் மூன்றாம் கட்டமாக விரிவான அகழாய்வு பணி மேற்கொள்ளும் பொருட்டு காணொளி காட்சி வாயிலாக விரிவான அகழாய்வு பணிகளை துவக்கி வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவ்வகழாய்வு நடைபெறும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு பேசினார்.
இந்த அகழாய்வு ஏற்கனவே 2015-2016 மற்றும் 2017-2018 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆலைமேடு, நத்தமேடு, இருளன்தோப்பு மற்றும் சிவன்கோயில் ஆகிய இடங்களிலிருந்து தொல்லியல் துறையில் 33 குழிகள் சுமார் 825 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்றது. இதில், 1,404 தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்றன. இவை கற்காலம் முதற்கொண்டு வரலாற்று தொடக்க கால வரையிலான பண்பாட்டு கூறுகளை உள்ளடக்கியதாக இருந்தது.
இவ்வகழாய்வின்; முக்கிய கண்டு பிடிப்பாக செங்கற்கலால் கட்டப்பட்ட வட்டவடிவ கிணறு கிடைக்கப்பபெற்றது. தமிழக தொல்லியல் வரலாற்றில் சங்க காலத்தைச் சார்ந்த செங்கற்கலால் கட்டப்பட்ட மிகப்பெரிய அளவிலான சுமார் 3.91 மீட்டர் ஆழம் கொண்டது இக்கிணறு. இக்கிணறு சரிவக வடிவம் கொண்டு செங்கற்கலால் கட்டப்பட்ட இக்கிணறு 56 வரிசைகளை கொண்டு கட்டுமானப்பணிகளுடன் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு பழைய கலியுககாலத்தில் கி.மு.3-4 நூற்றாண்டுகளில் வீட்டில் பயன்படுத்தப்பட்ட பழைய உபகரணங்கள் முதலான நிறைய பொருட்கள் இங்கு கிடைக்கப்பெற்றது.அதனையடுத்து ஏற்கனவே இரண்டு சிறிய அகழ்வாராய்ச்சி நடந்த போது இந்த அளவுக்கு பல்வேறு பழைய கட்டுமானங்களோட அடையாளம் காணப்பட்டது. தற்போது விரிவான அகழ்வாராய்ச்சி என்பது ஒரு பழைய அளவிலான அகழ்வாராய்ச்சியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான அகழ்வாராய்ச்சி என்பது கிட்டதட்ட 25 நபர்கள் தினசரி என்ற முறையில் செப்டம்பர் வரை நடைபெறவுள்ளது. இந்த அகழாய்வு தொல்லியல் துறையைச் சார்ந்த பாஸ்கர் தலைமையில் மேற்கொள்ளவுள்ளது.
ஏற்கனவே, நம் திருவள்ளுர் மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு இடங்களில் இந்த அகழாய்வுகள் நடத்தப்பட்டு, நமக்கு பல்வேறு பழைய காலங்களில் இருக்கக்கூடிய உபகரணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இது தமிழகத்திலேயே ஒரு மிகப்பெரிய அளவில் இருக்கக்கூடிய தொல்லியல் ஆராய்ச்சியாக அமைய வாய்ப்பு உண்டு.இங்கு ரூ.2.70 கோடி மதிப்பீட்டில் ஒரு தொல்பழங்கால அகழ் வைப்பகம் அமையவுள்ளது. இந்த தொல்லியல் ஆய்வு, அகழாவாராய்ச்சி, தொல்லியல் தளம் என இவையனைத்தும் சேர்த்து திருவள்ளூர் மாவட்டத்தில் பார்வைக்குரிய ஒரு முக்கியமான நிகழ்வாகவும், இடமாகவும்; அமையும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதில் தொல்லியல் துறை அகழாய்வு இயக்குனர் ஜே.பாஸ்கர், தொல்லியல் அலுவலர் சுரேஷ், தொல்லியல் ஆய்வாளர்கள், திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.