இன்றைய ராசிபலன்

Loading

மேஷம்
நீங்கள் மிகவும் கடினமாக உழைப்பதன் மூலம், அதுவும் இடைவெளி இல்லாமல் உழைப்பதன் மூலம், உங்கள் மதிப்பை நிரூபிக்க முயற்சிக்கிறீர்கள். அதற்கு, யாருடைய ஒப்புதலும் உங்களுக்கு தேவையில்லை. உங்களுக்கு நீங்கள் மட்டுமே போட்டியாளர். அவ்வப்போது, ஒரு முறை ஓய்வு எடுப்பதற்கு நினைவிற் கொள்ளுங்கள். மிகவும் கஷ்டத்தில் இருக்கும் போது கூட, நீங்கள் நல்லது செய்யவே விரும்புகிறீர்கள். முன்னேறுங்கள். நீங்கள் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும். மேலும், இது எதிர்மறை சிந்தனையிலிருந்து உங்கள் மனதை மாற்றிவிடும்.

ரிஷபம்
குடும்பத்தினரும், அன்பான நண்பர்களும் இன்று உங்கள் நாளில் நடக்கும் விஷயங்களைப் பார்த்து வெறுமனே பரிதாபம் மட்டுமே படுவார்கள். படுக்கையிலிருந்து எழுந்து, புதிய காற்றைச் சுவாசிக்க வெளியே செல்லுங்கள். ஒரே இரவில் நீங்கள் நம்பிக்கையை வளர்க்க முடியாது. சரியான திசையில், சிறிய படிகள் வைத்து நம்பிக்கையை வளர்ப்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் சுய மதிப்பை யாரும் வரையறுக்க முடியாது என்பதை உங்களுக்கு நீங்களே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது. எனவே, இனி யாராவது அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று நீங்கள் காத்திருக்க வேண்டாம்.

மிதுனம்
உங்களை மற்றவர்கள் புகழ்ந்து பேசுவது உங்களுக்கு நன்றாக இருக்கலாம். ஆனால், முழு மனதுடன் உங்களைப் புகழ்ந்து பேசுபவர்களிடம் கவனமுடன் இருக்க வேண்டும். உண்மையாகக் கருத்து தெரிவிப்பார்கள் மற்றும் போலியாக உங்களைப் புகழ்ந்து பேசுபவர்களை வித்தியாசப்படுத்திக் கொள்ள வேண்டும். மன அழுத்தமும், பதட்டமும் உங்கள் உடல்நலத்தைப் பாதிக்கிறது. உங்கள் உடல் நலத்தின் மீது அக்கறை எடுத்துக் கொள்வது எல்லாவற்றையும் விட முக்கியமானது. உங்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து தடைகளிலிருந்தும் விடுபடுங்கள். இது கடினமாக இருந்தபோதும், படிப்படியாகத் தடைகளிலிருந்து விடுபடுங்கள்.

கடகம்
அமைதியாக அமர்ந்து கொண்டு மூச்சை இழுத்து விடுங்கள். கோபம் உங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவும், உடனடி வெளிப்பாடாகவும் இருப்பதுஉங்களுக்குத்தெரியும்.உங்கள் மனநிலையை அடக்கி ஆளாமல் விட்டு விட்டால், அது உங்கள் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனைத்து வகையான மனக்கசப்பையும், அதிருப்தியையும் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.உங்களைப்பாதிக்கும்பிரச்சினைகளைக்கண்டறியவும். இன்று, உங்கள் நண்பரிடமிருந்தோ அல்லது உங்களுடைய சரியானகூட்டாளரிடமிருந்தோநீங்கள் ஆறுதலையும் தீர்வுகளையும் பெறுவீர்கள். கோபத்தினால் நீங்கள் செய்யும் தவறுகளை எவ்வாறு தடுப்பது என்று, உங்களுக்கு அறிவுரை சொல்லக்கூடிய நபர்களிடமிருந்துபதிலைப்பெற்றுக் கொள்ளுங்கள்.

சிம்மம்
இந்த நாள் உங்களுக்கு பிரகாசமாக உள்ளது, தொழில் மற்றும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்தும் கலையை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். வேலை விஷயங்களை வீட்டிற்குக் கொண்டு வருவதால், உங்கள் அன்புக்குரியவர்களுடன் வீட்டில் போதுமான நேரத்தைச் செலவிட உங்களால் முடியாமல் போகலாம், உங்களது சகாக்களினால் உண்டாகும் அழுத்தம் உங்கள் வாழ்க்கையில் தீர்மானிக்கும் காரணியாக இருந்து வருகிறது. இன்றைய நாளில் நீங்கள் சொல்லும் “இல்லை” என்ற சொல்லை உறுதியாகச் சொல்ல வேண்டும்.

கன்னி
இன்று நீங்கள் பேசும் வார்த்தைகளில் கனிவாகப் பேசுங்கள். உங்கள் கனிவான வார்த்தைகள் நீங்கள் விரும்பும் நபருக்கு ஆறுதலைத் தரும். இதனால் கடந்த காலத்தில் ஏற்பட்ட காயங்கள் மறைந்து விடும். மேலும், மக்கள் உங்களை புதிய மரியாதையுடன் பார்ப்பார்கள். நீங்கள் ரகசியங்களைப் பாதுகாப்பதில் வல்லவர். ஆனால், அதே போன்று உங்களைச் சுற்றியுள்ளவர்களும் இருக்க வேண்டும் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி நீங்கள் நினைத்தால், அதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும்.

துலாம்
நீங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் சமிக்ஞைகளை விட்டுவிடுகிறீர்கள். ஆனால், இன்று நீங்கள் பெறும் பலவிதமான சமிக்ஞைகளால் மிகவும் குழம்பிப் போயுள்ளீர்கள். ஒருதலையான காதல் மிகவும் காயப்படுத்துகிறது. சில தவறான புரிதல்களை மாற்றியமைக்க இந்த நேரத்தை உபயோகித்துக் கொள்ளுங்கள். சில சாதகமான கிரக மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆதலால், இப்போது நீங்கள் சிலவற்றை புதிதாக தொடங்க இது ஒரு நல்ல தருணம் ஆகும். அவசரகோலத்தில் முடிவுகளை எடுப்பதைத் தவிருங்கள். அதிலும் குறிப்பாக, நிதி சம்மந்தமானவைகளில் இதை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.

விருச்சிகம்
எதையும் பட்டென பேசும் தன்மை கடந்த காலங்களில் உங்களைச் சிக்கலில் ஆழ்த்தி இருக்கலாம். உங்கள் சிந்தனையற்ற தன்மை உங்களைப் பற்றி அக்கறை கொண்டவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் செயல்களைப் போலவே உங்கள் வார்த்தைகளுக்கும் நீங்கள் பொறுப்பு. நீங்கள் ஏற்கனவே உடைந்து விடும் நிலையில் இருக்கிறீர்கள், மேலும் அதிகரித்து வரும் மன அழுத்தம் உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாது. நீங்கள் யார் மீதாவது நம்பிக்கை வைக்க வேண்டும் அல்லது உங்கள் மனதை எளிதாக்க உதவும் சில செயல்களை மேற்கொள்ள வேண்டும்.

தனுசு
இன்று உங்கள் மனதில் நிறைய விஷயங்களைச் சிந்தித்து வருகிறீர்கள், ஆனால் அந்த விஷயங்களை விரைவாகச் சிந்திக்க வேண்டாம். உங்களிடம் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் திறமை இன்று உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்களைச் சுற்றியுள்ள நல்லெண்ணம் கொண்ட நபர்களால் கவரப்படுவீர்கள். உங்கள் மனதை வலுவாக வைத்திருங்கள், நீங்கள் கேட்கும் அனைத்தையும் நம்ப வேண்டாம். சிக்கலான விஷயங்களை மட்டும் நிராகரிக்க வேண்டாம். ஒரு நேரத்தில் ஒரே ஒரு சிக்கலுக்கு மட்டும் தீர்வு காணுங்கள்.

மகரம்
விஷயங்கள் மிக விரைவாக நடந்து கொண்டிருக்கின்றன. மேலும், நடைமுறையில், நீங்கள் கட்டுப்பாட்டோடு இருக்கும் முயற்சியில் செயலற்றுவிட்டதாக உணர்கிறீர்கள். ஆனாலும், இத்தகைய குறுகிய காலகட்டத்தில், இது போன்ற விஷயங்களை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நிறைவேற்ற வேண்டும்! இது உங்கள் ஆரோக்கியத்தை சீர்குலைத்து விடும். நாட்கள் கடக்கையில், உங்களது சமூகம் சார்ந்த மனப்பாங்கினை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். கடந்த கடினமான காலங்களில், உங்களுக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் சிறந்த பிரதிபலனை அளித்து, அன்பு கூருங்கள்.

கும்பம்
நீங்கள் ஏன் சோம்பேறிகளாக இருக்க விரும்புகிறீர்கள்? இந்த கேள்வி சில காலமாக உங்கள் மனதை ஆக்கிரமித்துள்ளது. அதை நீங்கள் அகற்ற வேண்டும். இந்த எண்ணத்தால் உங்கள் மனம் பாதித்து இருந்தாலும், அதை உயர்த்துவதற்கான நேரம் இது. நீங்கள் எல்லாவற்றிலிருந்தும் தப்பிக்க விரும்புகிறீர்கள். ஒருவேளை நீங்கள் இவ்வளவு காலமாகத் திட்டமிட்டிருந்த பயணத்திற்கான நேரம் இது. அந்த அழுத்தங்களைத் தளர்த்திக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் படைப்புத் திறன்களை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்!

மீனம்
புதிய விஷயங்களில் அவசரமாகச் செயல்படுவதைத் தவிர்க்கவும். ஒரு நேரத்தில், ஒரேயொரு விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். நீங்கள் எதைச் செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்யுங்கள். உங்கள் செலவு செய்யும் பழக்கத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். முன்பு எப்போதும் இல்லாத வகையில் இப்போது நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்பதால்,மனதிற்குப்பிடித்ததை உடனேவாங்குவதைத்தவிர்க்கவும். நண்பர்கள் அல்லது அன்புக்குரியவர்கள் இன்று உங்களை ஆச்சரியப்படுத்துவார்கள். நீங்கள் நேசிக்கப்படுவதையும், பாராட்டப்படுவதையும் உணர்வீர்கள். உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களை நினைத்து மகிழ நேரம் ஒதுக்குங்கள். உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியையும், அமைதியையும் பாதிக்கும்விஷயங்களைக் கண்டறிந்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *