ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கோதண்டராமர் பக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதனையடுத்து விழாவின் முதல் நாள் அனுமந்த வாகனத்தில் ஸ்ரீராமர் திருவீதி உலா,இரண்டாவது நாளாக ஶ்ரீ ஹாரிபந்த சேவை,மூன்றாவது நாளாக ஶ்ரீ சீதா தேவி,கோதண்டராமர் திருக்கல்யாண வைபவம் மற்றும் விழாவின் இறுதியாக விடையாற்றி ஊஞ்சல் சேவையுடன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஆலய குருக்கள்,விழா குழுவினர்கள்,பொதுமக்கள்,பக்தர் கள் பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.