உலக குழந்தைகள் புத்தகத் தின விழா கொண்டாட்டம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் ஒன்றியத்தில் உள்ள புலியடிதம்பம் ஆக்சிலியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாக உள்ளரங்கில் மாலை நேர பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு விழாவும் உலக குழந்தைகள் புத்தக தின விழா கொண்டாட்டமும் இணைந்து கொண்டாடப்பட்டது. தாளாளர் மற்றும் இல்ல தலைவி சம்பூரண மேரி தலைமை வகித்தார். சலேசிய உடன் உழைப்பாளர் சபைத் தலைவர் ஜோசப், மாலை நேர பள்ளி பொறுப்பாளர் ஜெனோபியா முன்னிலை வகித்தார்கள். மாலை நேர பள்ளி ஆசிரியை அனு தர்ஷினி வரவேற்றார். புலியடிதம்பம், இந்திராநகர், திட்டுக்கோட்டை, தெல்லியன்வயல், மேலவாக்கோட்டை, வேம்பனி, வேலடித்தம்மம், நெடோடை மையங்களிலுள்ள மாலை நேர பள்ளி மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் மகேஸ்வரி, ரஞ்சிதா, இந்துமதி, அபிநயா, ஸ்ரீதேவி, மாலினி, பிரியங்கா ஆகியோர் சிறப்பாக பயிற்றுவித்து பயிற்சியளித்து கலை நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்குபெற்றனர். முன்னதாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளை சலேசிய உடன் உழைப்பாளர்கள் ஜெயராணி, ஆண்ட்ரூஸ், ஸ்டெல்லா, கிளாடி, அருள் இளங்கோ, கிளாரா, திவ்யநாதன் ஆகியோர் வழங்கினார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி உலக குழந்தைகள் புத்தக தின விழாவானது கிறிஸ்டியன் ஆண்டர்சன் என்ற குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் 1967 ஆம் ஆண்டு ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது என்றும் வாழ்வில் உயர குழந்தைகள் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறி விஞ்ஞான துளிர் சிறுவர்களுக்கான மாத இதழிலிருந்து வினாக்கள் கேட்டு பதில் கூறியவர்களுக்கு புத்தகங்களை பரிசாகவும் வழங்கினார். மாணவ மாணவிகள் தங்களின் அறிவியல் படைப்புகளையும் கைவினைப் பொருள்களின் படைப்புகளையும் காட்சிபடுத்தியிருந்தனர். மாலை நேர பள்ளி ஆசிரியை அருள்கொடி நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.