சகுந்தலை வேடத்தில் நடிக்க பயந்தேன்
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருபவர், சமந்தா. தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதல் திருமணம் செய்த அவர், பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு, மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துகிறார். மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை தேறி வருகிறார். அவர் நடித்துள்ள ‘சாகுந்தலம்’ என்ற பான் இந்தியா படம், வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
இதுபற்றி சமந்தா கூறுகையில், ‘தெலுங்கில் உருவான ‘சாகுந்தலம்’ படத்தில் நடிக்க மிகவும் பயந்தேன். இயக்குனர் குணசேகர் சொன்ன கதை என்னை நிஜமாகவே பயமுறுத்தியது.
ஆனால், தொடர்ந்து என்னை வற்புறுத்தி நடிக்க வைத்தார்.
நான் நடித்த சகுந்தலை கேரக்டர் மிகச்சிறப்பாக இருப்பதாக படக்குழுவினரும், இதன் பிரத்தியேக காட்சியைப் பார்த்தவர்களும் சொன்னபோது, உண்மையிலேயே எனக்குப் பெருமையாக இருக்கிறது. மகாகவி காளிதாஸ் எழுதிய புராணக்கதை ‘அபிஞான சாகுந்தலம்’. இதை அடிப்படையாக வைத்து உருவான ‘சாகுந்தலம்’ படத்தின் டிரைலர் வரவேற்பு பெற்றுள்ளது. தேவ் மோகன் ஹீரோவாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், கவுதமி, மோகன்பாபு, மதுபாலா, கபீர் சிங் நடித்தனர். மணிசர்மா இசை அமைத்துள்ளார். சகுந்தலா, துஷ்யந்தன் காதலை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது’ என்றார். தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ேஜாடியாக ‘குஷி’, ஆங்கிலத்தில் ’அரேஞ்மெண்ட் ஆஃப் லவ்’, இந்தியில் ’சிட்டாடல்’ வெப்தொடரில் சமந்தா பிசியாக நடித்துக் ெகாண்டிருக்கிறார்.