பிஜேபி அரசைக் கண்டித்து நடைபெற உள்ள போராட்டம்

Loading

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறித்த ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து நடைபெற உள்ள போராட்டம் குறித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூரில் உள்ள தனியார் ஹாலில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்த்திற்கு மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமை தாங்கினார்.  திருவள்ளூர் நகர தலைவரும், நகரமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் வி.இ.ஜான் வரவேற்றார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவள்ளூர் எம்.பி. கே.ஜெயக்குமார், பொன்னேரி எம்எல்ஏ. துரை சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு எம்பி ராகுல் காந்தி மீது திணிக்கப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும், மக்களவை உறுப்பினர் பதவியை பறித்த பாஜக அரசின் அராஜக போக்கை கண்டித்து மாவட்ட முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படுவது  குறித்து  விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், சி.பி.மோகன்தாஸ், ஒய்.அஸ்வின்குமார், ஜே.கே.வெங்கடேஷ், ஜே.டி.அருள்மொழி, டி.வடிவேலு, எஸ். எஸ். சரவணன், வி. எஸ்.ரகுராமன் வி.செல்வகுமார், முகுந்தன், எம். எஸ். ராமன் எம்.டி சதீஷ், கார்த்திகேயன் ஜி.எம்.பழனி ஜோதி, சுதாகர், கோவிந்தராஜ், சம்பத், பொன்னுரங்கம், வில்சன், உதயா, காந்தி, பி.ஆர். ரமேஷ் கோடீஸ்வரன், குப்பன், பூண்டி ராஜா, மூர்த்தி, வெங்கல் சிவசங்கரன், கே.டி பிரகாஷ், பார்தசாரதி, செல்லவகுமார், முகமது சபீர், துரை பாபு,  சாமுவேல் உள்பட நகர வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *