பி.எஸ்.என்.ஏ கல்லூரியில் இரண்டு நாள் ஹேக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரத்தில் பி.எஸ்.என்.ஏ கல்லூரியில் இரண்டு நாள் ஹேக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிstartup TN( மதுரை பிராந்திய மையம்) உடன் இணைந்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள்துறை(MSME) மற்றும்Google Developers Group மதுரை ஆகியவற்றின் கீழ் நிலையான வளர்ச்சி இலக்குக்கான இரண்டு நாள்:36 நேர ஹேட்கத்தான் நிகழ்ச்சி பிஎஸ்என்ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.Staru P.T.N என்பது தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப்கள் மற்றும் புதுமைகளை வளர்ப்பதற்கான தமிழ்நாடு அரசின் நோடல் ஏஜென்சி ஆகும். ஸ்டார்க்ஆப் டி என்- ன்தொலைநோக்குப் பார்வையானது தமிழ்நாட்டை மேல்நோக்கிய ஸ்டார்ட்அகளுக்கான உலகளாவிய இலக்குகளுக்கான மேம்படுத்துவதாகும். தொழில்,புத்தாக்கம், மற்றும் உள்கட்டமைப்பு, நல்ல ஆரோக்கியம், பசியின்மை, தண்ணீர் சார்ந்த வாழ்க்கை, தரமான கல்வி மற்றும் காலநிலை நடவடிக்கைகள் போன்ற S.D.G தொடர்பான பிரச்சனைகளுக்கான தீர்வுகளை ஏற்படுத்த, தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் மாணவர்களின் தேர்ந்தெடுக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக மொத்தம் 150 அணிகள் பதிவு செய்யப்பட்டன,அதிலிருந்து 33 ஆர்வமுள்ள அணிகள் ஆய்வு செய்யப்பட்டு இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. StartupTN ஆனது 5 சிறந்த அணிகளுக்கு 1 லட்சம் ரூபாய் வரை ரொக்கப் பரிசுடன் கௌரவிக்ககிறது. இந்நிகழ்ச்சியை கே எஸ்.கமலக்கண்ணன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், நாகா ஃபுட்ஸ்,திண்டுக்கல், மற்றும் பி.எஸ்.என்.ஏ கல்லூரி முதன்மை தலைவர்,ஆர்.எஸ் கே.ரகுராம், முதல்வர் டாக்டர் வாசுதேவன், ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
மேலும் ஸ்டார்ட் அப்டிஎன் அதிகாரிகள் திட்ட முன்னணி மதுரை மண்டல மையமான டான்சி வினோத் ராஜேந்திரன், திட்ட அசோசியேட் மதுரை மண்டல மைய டான்சிம் கருப்பணன் மற்றும் நிறுவனர் மற்றும்CEO, JIOVIO H.G.D.C மதுரைசெந்தில்குமார்,முருகேசன் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் ஹேமலதா,மற்றும் பேராசிரியர்டாக்டர் மீனா என்ற ஜெயந்தி பேராசிரியர்டாக்டர் புஷ்பலதா ஆகியோர் கலந்து கொண்டு வழி நடத்தினர்.