சுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் ராம நவமி சிறப்பாக கொண்டாடப்பட்டது. நடைபெற்றது
தென்காசி மாவட்டம் பண்பொழியில் அமைந்துள்ள அருள்மிகு பூமி நீளா சமேத சுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் ராம நவமி சிறப்பாக கொண்டாடப்பட்டது. நடைபெற்றது. காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் தீப ஆராதனைகளும் நடைபெற்றது. இத்திருக்கோவில் கும்பாபிஷேக உபயதாரர்களான ஓய்வு பெற்ற ஆசிரியர் மு.ஆறுமுகம், முன்னாள் ராணுவ வீரர் மா.பெரியசாமி, ஓய்வு பெற்ற தலைமை மருந்தாளுநர் மு.முருகையா, பணிநிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் கி.சீதாராமன் ஆகியோரும் திரளான பக்தர்களும் சிறப்பு அலங்காரத்தில் பூமி நீளா சமேத சுந்தரராஜப் பெருமாளை தரிசனம் செய்தனர். சுவாமிக்கான அபிஷேக ஆராதனைகளை திருக்கோவில் அர்ச்சகர் மகாதேவ ஐய்யர் நடத்தி வைத்தார்.