அக்னி சட்டி திருவிழா நடைபெற்றது
சென்னை பழையவண்ணாரப்பேட்டடை அருள்மிகு சின்ன சேனியம்மன் திருக்கோயில் 37-ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு அக்னி சட்டி திருவிழா நடைபெற்றது.அம்மையப்பன் தெருவில் உள்ள குருசாமி எம்.கே.மோகன்தாஸ் அக்னி சட்டி ஏந்தி அவரது வீட்டில் இருந்து தொடங்கி பக்தர்கள் அனைவரும் அலகு தரித்து அக்னி சட்டி எந்தி திருவீதி உலா வந்து அருள்மிகு சின்ன சேனியம்மன் திருக்கோயிலை வந்தடைந்து நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டனர்.
பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுசெயலாளர் எஸ்.ஆர்.செந்தில்,ஆர்.கே.நகர் மேற்க்கு மண்டல் தலைவர் எஸ்.ஏ.வீரா,ஆர்.கே.நகர் தெற்க்கு மண்டல் தலைவர் துறைகணேஷ்,பொதுசெயலாளர்கள் சந்திரசேகர்,பிரவீன்குமார்,பொரு ளாளர் சாஜி,இளைஞர் அணி மாவட்ட துணைதலைவர்,மண்டல் செயலாளர் ஆனந்பாபு,வட்ட தலைவர்கள் டில்லி பாபு,முருகன்,வழக்கறிஞர் பிரிவு மண்டல் தலைவர் கார்த்திக் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் பக்தர்கள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.