ஏ .ஐ .டி.யு. சி போக்குவரத்து கழக தொழிலாளர்களின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
ஏ .ஐ .டி.யு. சி போக்குவரத்து கழக தொழிலாளர்களின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் பட்ஜெட்டில் தேவையான நிதி ஒதுக்கி அரசு போக்குவரத்து கழகங்களை பாதுகாத்திட வேண்டும், தனியார்மய நடவடிக்கைகளை கைவிட வேண்டும், வாரிசுதாரர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப காலிப் பணியிடங்களை நிரப் பிட வேண்டும் , அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்திட வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர் களின் 90 மாத கால அகவிலைப்படி உயர்வினை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்லவன் சாலை அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு மார்ச் 28 அன்று ஏ.ஐ.டி.யு.சி தொழிலாளர் களின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாநகர போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கழகம் சார்பில் தொழிலாளர்கள் முழக்கங் களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .மாநில போக்குவரத்துக் கழக பொதுச் செயலாளர் ஜெ.ஸ்ரீதரன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சம்மேளனத்தின் பொறுப்பாளர்கள் கஜேந்திரன் ,பொதுச்செயலாளர் ஆர். ஆறுமுகம், ஓய்வு பெற்ற சம்மேளன பொதுச் செயலாளர் எம். நந்தா சிங், கோவிந்தசாமி , ஏஐடியுசி யின் வடசென்னை மாவட்ட தலைவர் கே. குப்பன், செயலாளர் அருள் , தென் சென்னை மாவட்ட செயலாளர் அழகேசன் உள்ளிட்டோர் பேசினர். ஏ.ஐ.டி.யு.சி யின் மாநில பொதுச் செயலாளர் எம். இராதாகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். வரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை அரசு பாதுகாத்திட வேண்டும் .ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான பணப்பலன் களையும் வழங்கிட வேண்டும் என பேசினார். ஸ்ரீதரன் முடிவில் நன்றி தெரிவித்தார்.