கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
கோவை வடவள்ளி அடுத்த பாப்பநாயக்கன் புதூர் பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் முன்பாக, மாநகராட்சி நிர்வாகம், மற்றும் சூயஸ் நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாநகராட்சியை கண்டித்தும், கோவை மாநகரில் 24 மணி நேரமும் தண்ணீர் வழங்கும், சூயஸ் திட்ட நிர்வாகத்தை கண்டித்தும், இன்று கோவை வடவள்ளி அடுத்த பாப்பநாயக்கன் புதூர் பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக, பொதுமக்களின் வீடுகளில் பொறுத்தபடும்
குடிநீர் மீட்டர்களை தொடர்ந்து மர்ம நபர்கள் திருடி வருகின்றனர். இந்த திருட்டுக்கு இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்க மறுக்கும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளையும் கண்டித்து கண்டன முழங்கங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈட்பட்டனர். இதனை தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளர் ஆறுமுகம் கூறும்போது
பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தண்ணீர் வழங்க கூடிய திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை 41வது வார்டு பகுதியில் அனைத்து வீடுகளிலும், தண்ணீர் கணக்கீட்டு கருவி பொறுத்த பட்டு வருகின்றது. இந்த கருவியானது பித்தளையால் உருவாக்க பட்டுள்ளது. எனவே இந்த கருவிகள் பல திருடு போகின்றது. அவ்வாறு திருடப்பட்ட வீட்டில் மீண்டும் அந்த கருவியை பொருத்த
2500 அபராதம் கட்ட வேண்டும் என சூயஸ் நிறுவனம் கூறுவதாகவும், மூன்று நாட்களுக்குள் இதனை கட்ட தவறினால், குடிநீர் இணைப்பு துண்டிப்பு அபராத தொகை என மாநகராட்சி நிர்வாகம், 2000 ரூபாயை அந்த வீட்டுக்கு அபராதமாக விதித்து வருகின்றது. இதனால் பல்வேறு பொதுமக்கள் இந்த 24 மணி நேர தண்ணீர் வழங்கும் சூயஸ் திட்டத்தால் பாதிக்கபட்டு வருகின்றனர். இது குறித்து காவல் நிலையத்தில், மாநகராட்சி நிர்வாகத்தில், சூயஸ் நிர்வாகத்தில் என எங்கு புகார் அளித்தாலும், எந்த வித நடவடிக்கையும் எடுக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. வீடுகளில் இந்த தண்ணீர் மீட்டர் திருடு போனால் உடனடியாக கட்டணமின்றி புதிய மீட்டரை இலவசமாக வழங்க வேண்டும். அனைத்து குடிநீர் மீட்டர்களுக்கு பாதுகாப்பு பெட்டிகளை உடனடியாக பொருத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாகவும், இதற்கு மாநகராட்சி நிர்வாகம், மற்றும் சூயஸ் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், மாநகராட்சி அலுவலகம் முன்பாக பொதுமக்களை திரட்டி மாபெரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். இந்த ஆர்பாட்டத்தில் 41 வது வார்டு கவுன்சிலர் சாந்தி சந்திரன், மாவட்ட செயலாளர் சிவசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளர் ஆறுமுகம், மண்டல துணை செயலாளர் மோகன், மண்டல பொருளாளர் ஜூவா என பலரும் கலந்து கொண்டனர்.