வெங்கரையில் ஒன்னேகால் கோடியில் தார்சாலை அமைக்க பூமி பூஜை! 

Loading

வெங்கரையில் ஒன்னேகால் கோடியில் தார்சாலை அமைக்க பூமி பூஜை! வெங்கரை பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் இஞ்சினியர். எஸ்.சேகர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் வெங்கரை பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மண் சாலையில் இருந்து தார்ச்சாலை அமைப்பதற்காக ரூ.1 கோடியே 41 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் இன்ஜினியர் எஸ்.சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வெங்கரை பேரூராட்சி தலைவரும், நாமக்கல் மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளருமான விஜயகுமார் தலைமையில் நடந்த விழாவில்  நீர், மோர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நாமக்கல் ஆவின் சேர்மன் ராஜேந்திரன், வெங்கரை முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் நித்யாவிஜயகுமார மற்றும் ராஜமாணிக்கம்,வெங்கரை பேரூராட்சி துணைத்தலைவர் ரவீந்தர், வார்டு கவுன்சிலர்கள்  ராணிராஜா, ஜெயசித்ரா சரவணன், வனிதா மோகனமுருகன், தனலட்சுமி பொன்னம்பலம், நிவேதிதா சுபாஷ், சந்தோஸ் மற்றும் பேரூராட்சி அலுவலர்  ராமநாதன், ஜெகநாதன் மற்றும் பொதுமக்கள் பலர்  கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply