முதலமைச்சர் அவர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நன்றிகளை தெரிவித்தார்.

Loading

தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கி கடை நிலையில் இருந்தவர்களை உயர்த்தி தொழில் முனைவோர்களாக உருவாக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நெஞ்சம் நெகிழ்ந்த பேட்டி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் தாட்கோ (தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. நிலம் வாங்குதல் மற்றும் நிலம் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 30 சதவிகிதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வரை மானியத்துடன் கூடிய கடனுதவியும் நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 250 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5எக்கர் புஞ்சை நிலம் உள்ள ஆதிதிராவிடர் மக்களுக்கு நில வளம் மேம்படுத்துதல், பம்பு செட் அமைத்தல் சொட்டு நீர் பாசனம் மற்றும் சுழல் முறை நீர் பாசனம் அமைத்தல் ஆகியவற்றிற்கு மாணியத்துடன் கூடியகடன் உதவியும் அளிக்கப்பட்டு வருகின்றது.
தொழில் முனைவோர் திட்டத்திண் கீழ் 18 வயது முதல் 65 வயதிற்கு மேற்படாத ஆண்டு வருமானம் 3 இட்ைசத்திற்கு குறைவாக உள்ள ஆதிதிராவிட தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவியும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத்திட்டத்தின் கீழ் படித்த வேலையற்ற 18 முதல் 45 வயது வரை உள்ள ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு சுயதொழில் செய்வதற்கான மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த மகளிரின் பொருளாதாரத்தை மேம்படும் வகையில் மகளிர் சுயடதவிக்குழுக்களுக்கான மகளிர் கடனுதவி அளிக்கும் திட்டம் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
நாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்ற மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த மக்கள் தங்கள் விண்ணப்பங்களை application.tahdco.com என்ற இணையதள முகவரியிலும் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த மக்கள் தங்கள் விண்ணப்பங்களை fasLtahdco.com என்ற இணைய தள முகவரியிலும் பதிவு செய்ய வேண்டும். பதிவு மூப்பு அடிப்படையில் அழைப்புக் கடிதம் அனுப்பட்டு அந்தந்த திட்டங்களுக்கான அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான தேர்வுக்குழுக்கனின் மூலம் நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு கடனுதவி வழங்கும் வங்கிகளின் ஒப்புதல் பெறப்பட்டவுடன் அவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் (2021-2022) ஆண்டில் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த 38 நபர்களுக்கு ரூ.66:96 இலட்சம் மானியத்துடன் கூடிய ரூ 223 கோடி கடனுதவியும், இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின் வகுப்பைச் சார்ந்த 34 நபர்களுக்கு ரூ.5538 இலட்சம் மானியத்துடன் கூடிய ரூ.187 கோடி கடனுதவியும், மகளிர் கயத தவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவித் திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த 380 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.75 இலட்சம் மானியத்துடன் கூடிய ரூ.2.50 கோடி கடனுதவியும் என மொத்தம் 432 நபர்களுக்கு ரூ. 198 கோடி மானியத்துடன் கூடிய ரூ560 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் (2022-2023) நிதியாண்டில் தாட்கோ மூலம் நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் வகுப்பைச் சார்ந்த 1 நபருக்கு ரூ.2.25 இலட்சம் மானியத்துடன் கூடிய ரூ.7.5 இலட்சம் கடனுதவியும், தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த 58 நபர்களுக்கு ரூ.30.75 இலட்சம் மானியத்துடன் கூடிய ரூ272 கோடி கடனுதவியும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின் வகுப்பைச் சார்ந்த 34 நபர்களுக்கு ரூ.49,99 இலட்சம் மானியத்துடன் கூடிய ரூ.150 கோடி கடனுதவியும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவித் திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த 288 மகளிர்களுக்கு 24 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.53.00 இலட்சம் மானியத்துடன் கூடிய ரூ120 கோடி கடனுதவியும் என மொத்தம் 391 நபர்களுக்கு- ரூ.203 கோடி மானியத்துடன் கூடிய ரூ87 கோடிகடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவம் மற்றும் அதனைச்சார்ந்த சிகிச்சையகம் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவியின் மூலம் ஊடுகதிர் மையம் அமைத்து பயனடைந்த வால்பாறை வட்டம் பச்சமலை பகுதியைச் சேர்ந்த திரு.விஷ்ணு (வயது 34) அவர்கள் தெரிவித்தாவது,
என் பெயர் விஷ்ணு நான் வால்பாறை வட்டத்தில் பச்சமலைப் பகுதியில் வசித்து
வருகின்றேன். எனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. நான் பத்தாம்வகுப்பு வரை
படித்துவிட்டு பின்பு இரண்டாண்டு ரேடியாலஜி பட்டயப்படிப்பு படித்துவிட்டு பொள்ளாச்சியில் உள்ள
தனியார் மருத்துவமனையில் ரேடியாலஜி பிரிவில் வேலை பார்த்து வந்தேன். மாதம் ரூ.8000 சம்பளம் கிடைத்தது. எனது வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வருவதும். குழந்தையை படிக்க வைப்பதும் மிகுந்த சிரமமாக இருந்தது. மேலும் எனது கனவு நான் வசிக்கும் வால்பாறை பச்சமலைப்பகுதியில் ஊடுகதிர் மையம் அமைக்கவேண்டும் என்பதுதான்,
ஆனால் ஊடுகதிர் மையம் அமைக்கும் அளவிற்கு என்னிடம் பண வசதியில்லை. ஏதாவது ஒரு கூடனுதவி பெற்று மாடுகதிர் மையம் அமைத்து விடணாம் என்று பல நாட்கள் அலைந்து சிரமப்பட்டேன் எனக்கு யாரும் கடன் கொடுக்க முன் வரவில்லை. மிகுந்த மன வேதனையோடு இருந்த போது. தாட்கோ மூலம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுவதாக தகவலை அறிந்தேன், தாட்கோ அலுவலகத்திற்கு சென்று விவரம் கேட்டு அறிந்து கொண்டேன் உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்தினை பதிவு செய்தேன். எனக்கு ஊடுகதிர் மையம் அமைப்பதற்கான கடனுதவி உத்தரவு கிடைக்கப்பெற்றது. தாட்கோ மூலம் 30 சதவிகிதம் மானியம் அதவது ரூ.2,25,000 மானியத்தில் ரூ.5,75,000 கடனுதவியில் ஊடுகதிரி மையம் அமைத்தேன். தற்போது அதைக் கொண்டு என் பகுதி மக்களுக்கு சேவை செய்தும் மேலும் எனது வருமானத்தையும் அதிகப்படுத்திட முடிந்தது இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு வங்கிக் கடன் மற்றும் வாடகை செலுத்தியது போக ரூ20,000க்கும் அதிகமாக வருமானம் கிடைக்கின்றது.
தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த நான் சொந்த ஊடுகதிர் மையத்திற்கு உரிமையாளராக ஆக வேண்டுமென்று நீண்ட நாட்கள் கனவு கண்டு வந்தேன் ஏழையான என்னால் எப்படி உடுகதிர் மையம் அமைக்க முடியும் என்று மிகுந்த மன வேதனையோடு பல நாட்கள் வருந்தினேன். என்ரான போன்ற நடுத்தர குடும்பத்தினரின் கனாவை நனவாக்கும்
வகையில் தாட்கோ மூலம் மானியத்தில் கடனுதவி வழங்கி உதவிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது சார்பாகவும், என்குடும்பத்தின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் தாட்கோ மூலம் தொழில் முனைவோர்களுக்கான மேம்பாடுத் திட்டத்தின் கீழ் மானியத்துடன்
கூடிய கடனுதவியின் மூலம் மசாலா பொடிகள் அறைக்கும் இயந்திரம் வாங்கி பயனடைந்த
தொட்டிப்பாளையம் பிரிவைச் சேர்ந்த திருமதி.ம.செல்வி (வயது 39) அவர்கள் தெரிவித்ததாவது,
என் பெயர் செல்வி நான் தொட்டிப்பாளையம் பிரிவில் வசித்து வருகின்றேன். எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனது குடும்ப சூழ்நிலை காரணமாக நான் 8 வகுப்பு: வரை மட்டுமே படித்துள்ளேன் ஆகவே நான் வசிக்கும் பகுதியில் ரோட்டு கடை நடத்திவந்தேன். அதில் வரும் வருமானம் போதுமானதாக இல்லை, எனது கணவர் பெயர் மருதாச்சலம், அவர் தனியார் டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். எங்களுடைய வேலைகள் அனைத்து நாட்களும் இருக்காத காரணத்தால் தினந்தோறும் வருமானம் கிடைப்பதில்லை. சாதாரண குடும்பமான எங்கள் குடும்பம் மிகுந்த வறுமையில் இருந்தோம்.
இதனால் மிகுந்த மன வேதனையோடு இருந்தேன், அப்பொழுதுதான் நாளிதழ்களில் தாட்கோ மூலம் தொழில் துவங்குவதற்கு மானியம் வழங்கப்படுவதாகவும், அதற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் செய்திகள் வந்தது நானும் உடனடியாக தாட்கோ அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கும் முறையையும், தகுதியையும் அறிந்து கொண்டேன். உடனடியாக தாட்கோ இணையதளத்தில் மசாலா பொடிகள் அறைக்கும் இயந்திரம் வாங்கிட உரிய ஆவணங்களோடு எனது விண்ணப்பத்திணை பதிவு செய்தேன்.
எனது விண்ணப்பித்தினை பரிசீலித்து ரூ.215340 மானியம் வழங்குவதோடு வங்கியின் மூலம் ரூ.446,196 கடனுதவியினை பெற்று மசாலா அறைக்கும் இயந்திரம் வாங்கினேன். மசாலா அறைக்கும் இயந்திரம் மூலம் அருகாமையில் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் சிறிய கண்டகளுக்கு மசான பொடிகள் வழங்கி வருகின்றேன். இதன் மூலம் எனக்கு மாதந்தோறும் அனைத்து செலவுகளும் போக ரூ.10.000 யிலிருந்து ரூ.15,000 வரை வருமானம் கிடைக்கின்றது. இதனைக் கொண்டு கடனை முறையாக திரும்ப செலுத்தி வருகின்றேன், எனது கனவை, நணவாக்கி எங்கள் குடும்பம் பொருளாதார நினை யர்வதற்கு நாட்கோ மூலம் மானியத்தில் கடன் வழங்கி உதவிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *