இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் இந்த திட்டத்தை உளமாற வரவேற்கிறோம்
இன்றைய தினம் தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறது அந்த பட்ஜெட்டில் வீடுகளை வாங்குகின்ற பொது மக்களுக்கு பதிவு கட்டணத்தை 4% இருந்து 2% குறைப்பு என்ற ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது. உள்ளபடியே இந்த 2% பதிவு கட்டணம் குறைப்பு திட்டம் வரவேற்கக் கூடிய ஒரு திட்டம். நாம் சார்ந்த அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் இந்த திட்டத்தை உளமாற வரவேற்கிறோம். இதற்காக தமிழக அரசுக்கும், மாண்புமிகு முதல்வருக்கும் துறையினுடைய அமைச்சருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் உளமாற பாராட்டுகளையும் இதயபூர்வமான வாழ்த்துக்களையும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் FAIRA கூட்டமைப்பு தெரிவித்துக் கொள்கிறது. அதேபோன்று இந்த 2% குறைப்பின் மூலமாக 1 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை வாங்கும் போது பொது மக்களுக்கு இனி கிட்டத்தட்ட பதிவு கட்டணம் 2% குறைப்பு திட்டத்தின் மூலமாக 2,00,000 ரூபாய் மிச்சப்படுத்துவதற்கான நல்லதொரு வாய்ப்பு ஒன்றை அரசு ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆட்சியில் 09.06.2017 அன்று பொத்தம் பொதுவாக தமிழகம் முழுவதும் 33% அரசு வழிகாட்டி மதிப்பு குறைப்பு என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. பதிவு கட்டணம் 1% இருந்து 4% உயர்த்தி இருந்தது நம் அனைவருக்கும் நினைவிருக்கும் இந்த பதிவு கட்டணம் 2% குறைப்பு என்ற திட்டத்தை அரசு அறிவித்துவிட்டு பொத்தம் பொதுவாக ரேண்டமாக ஏதோ ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை வழிகாட்டி மதிப்பையும் உயர்த்தி விடக்கூடாது என்கிற ஒரு பெரும் கோரிக்கையை கட்டுனர்களும் மற்றும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்களிடமிருந்தும் பொதுமக்களிடத்திலிருந்தும் எழுகிறது. எங்கெல்லாம் நிலங்களின் மீதான அரசு வழிகாட்டி மதிப்பு குறைவாக இருக்கிறதோ அதை கவனத்தில் கொண்டு ஓரளவுக்கு அந்த பகுதியையும் மாற்றும் வழிகாட்டி மதிப்பையும் உயர்த்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். பொத்தம் பொதுவாக எக்காரணத்தைக் கொண்டும் அரசு வழிகாட்டி மதிப்பை உயர்த்திடக்கூடாது என்கிற கோரிக்கையை வலுக்கிறது. அதே கோரிக்கையை நாம் சார்ந்த அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு ஆதரிக்கிறது. இந்த வழிகாட்டி மதிப்பு உயர்வோடு மட்டுமின்றி இந்த 2% கட்டணம் குறைப்பு என்ற ஒரு திட்டத்தின் மூலமாக பொதுமக்கள் உடனடியாக இந்த மார்ச் மாதம் இறுதிக்குள் வீடுகளையும், நிலங்களையும் வாங்குவதற்கு திட்டமிட்டு பதிவு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு ஆயத்தமாக இருக்கின்ற இந்த சூழ்நிலையில் அந்த திட்டத்தின் மூலம் இந்த பதிவு பணியை தள்ளி போடுவதற்கான வாய்ப்பு
இருக்கின்றது. ஆகவே இதை கவனத்தில் கொண்டு அரசு உடனடியாக இந்த திட்டத்தை அரசு ஆணை வெளியிட்டு நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
ஏனென்று சொன்னால் பெரும் கட்டுனர்களும் மற்றும் நிலம் அபிவிருத்தியாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு
அந்த திட்டங்களை எல்லாம் முன்பதிவு செய்து இந்த மார்ச் மாத இறுதிக்குள் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். பொதுமக்களும் இந்த வருமான வரி பிரச்சனைக்காக மார்ச் 31- க்குல் இந்த பதிவு பணியை மேற்கொள்ள வேண்டும் என பெரும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். திடிரென்று இந்த 2% பதிவு கட்டணம் குறைப்பின் திட்டத்தின் மூலமாக இந்த பணியில் கைவிடுவதற்கான வாய்ப்புகள் பொதுமக்கள் இடையே ஏற்படும் என்கிற ஒரு சூழல் நிலவுகிறது. ஆகவே அரசு இதனையும் கவனத்தில் கொண்டு உடனடியாக இந்த திட்டத்தை குறித்த அரசு ஆணையை வெளியிட்டு நடைமுறைப்படுத்துவதற்கு முன்வர வேண்டும். எது எப்படி இருந்தாலும் இந்த 2% பதிவு கட்டணம் குறைப்பு என்கிற திட்டம் வரவேற்கக் கூடிய ஒரு திட்டம் பொதுமக்களுக்கு பெருமளவில் இது பயனுள்ள திட்டமாக இருக்கிறது. ஆகவே இந்த பெரும் முயற்சியில் எங்களுடைய அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்திய தமிழக அரசுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் அதே போன்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருக்கும், உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் மீண்டும் ஒரு முறை எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் FAIRA கூட்டமைப்பின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் எண்ணற்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் எளிமைப்படுத்துவதற்கு மாற்றி அமைப்பதற்கு தேவையான கோரிக்கைகளையும் எங்களுடைய கூட்டமைப்பு அரசுக்கு முன் வைத்திருக்கிறது. அதனையும் அரசு கவனத்தில் கொண்டு விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைக்கின்றோம். இதன் மூலம் பதிவுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் அரசுக்கும் பெரும் அளவில் வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது. இந்தத் திட்டத்தை உடனடியாக நடைமுறைபடுத்துவதற்கு ஒரு வலியுறுத்தலை மீண்டும் அரசுக்கு நாங்கள் கோரிக்கையாக வைக்கின்றோம்.என்று தெரிவித்துள்ளார் .
0Shares