வேலூர் சன் பீம் பள்ளியின் ஆண்டு விழா சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ் பங்கேற்பு.
வேலூர் மாவட்டம் காட்பாடி சன்பீம் மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா வெகு விமர்சியான முறையில் நடைபெற்றது இந்தப் பள்ளியில் சி.பி. எஸ். இ, ஐ. சி. எஸ். இ, பள்ளியின் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சன்பீம் பள்ளியின் தலைவர் ஹரி கோபாலன், தலைமை தாங்கினார். தாளாளர்தங்கப்பிரகாஷ்,முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ஜோன் ஆர்த்தி,வரவேற்றார்.இந்நிகழ்ச் சியின் சிறப்பு விருந்தினரை பள்ளி துணைத் தலைவர் டாக்டர் ஜார்ஜ் அரவிந்த், அறிமுகம் செய்து வைத்து பேசினார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம். எஸ். ரமேஷ், கலந்து கொண்டு நீட் தேர்வில் தமிழக மற்றும் ஆந்திராவின் 13 மாவட்டங்களில் முதலிடம் பிடித்த மாணவர் தமிழ்ச்செல்வன், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவர் பயாஸ் ஜமால், 10.ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஜோதி ரோஷினி, இரண்டாம் இடம் பிடித்த மாணவர் ஆர் கோ முகர்ஜி, மற்றும் ஒவ்வொரு படத்திலும் முழு மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சன்பின் தேர்வில் வகுப்பு வாரியாக முதலிடம் பிடித்த மாணவ மாணவிகள் என 900 விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதை அடுத்து சன்பீம் இல்லத்து அணியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மெட்ரிக் பள்ளியில் மார்வல் அணியும், சி.பி.எஸ்.இ, பள்ளியின் நேதாஜி, பட்டேல் அணிகளும் பரிசு பெற்றது.இந்த ஆண்டு விழா முடிவில் சி.பி.எஸ்.இ, பள்ளி முதல்வர் ரத்தீஷ், அனைவருக்கும் நன்றி கூறினார்.