புனித லிட்வினா அறக்கட்டளை ஐ விஜயதரணி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் :- Dr. S.விஜய தரணி M L A விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உண்ணாமலை கடை பேரூராட்சியில் சாங்கை பகுதியில் அமைந்துள்ள வழக்கறிஞர் அருள்தாஸ் இல்லத்தில் வைத்து புனித லிட்வினா அறக்கட்டளை ஐ விஜயதரணி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இந்த அறக்கட்டளைக்கு வழக்கறிஞர் அருள்தாஸ் தலைவராகவும் , எபிராஜ் செயலாளராகவும் , ராஜதாஸ் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத் தலைவராக ஜார்ஜ் மற்றும் இணைச் செயலாளராக வழக்கறிஞர் கிங்ஸ்லியும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர் . இந்நிகழ்வில் உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவி பமிலா காங்கிரஸ் சிறுபான்மையின கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் மற்றும் எபினேசர் உட்பட பலர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர் . புனித லிட்வினா அறக்கட்டளை நோக்கம் குறித்து விஜய தரணி எம்எல்ஏ கூறியதாவது :- விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழ்மை நிலையில் உள்ள ஏழை எளியவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் , சிறுநீரகக் கோளாறு , மற்றும் வேதனைக்குரிய கொடிய நோய்கள் அதிகம் தாக்குகின்றன . வரும்காலங்களில் நோயின் கோரப் பிடியில் பிணைந்து வாழும் நோயாளிகளுக்கும் , மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளின் இறுதி நாட்களை வேதனையோடு முறையாக கவனிக்கப்படாமலும் , துர்நாற்றத்தோடும் மரண பயத்தோடும் ,மனபாரத்தோடும் ,விரக்தியோடும் வீடுகளிலே அனாதைகளாக நாட்களை கழித்துக் கொண்டிருக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான அரவணைப்பும் , வலிதணிப்பு சிகிச்சையும் ஜெப வேண்டுதல்கள் வழங்கி பராமரிக்கவும் , மரண வலி குறைப்பு சிகிச்சை தேவை என்பதை புனித லிட்வினா அறக்கட்டளை கண்டறிந்து உள்ளது . எனவே இதற்கு தீர்வாக மரண வலி குறைப்பு சிகிச்சை மையம் அமைத்திட புனித லிட்வினா அறக்கட்டளை உறுதி பூண்டு உழைத்து வருகிறது. இந்த நோக்கத்தை விஜயதரணி எம்எல்ஏ ஆகிய நான் பெரிதும் பாராட்டுகிறேன். தன்னலம் கருதாமல் ஏழைகளுக்கும் , நலிந்தவர்களுக்கும் , நோயினால் பீடிக்கப்பட்டவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டுகின்ற புனித லிட்வினா அறக்கட்டளையை பெரிதும் மனதார பாராட்டுவதாக விஜய தரணி எம்எல்ஏ கூறினார்….